பக்கம்:சைவமும் தமிழும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

誉52 சைவ சமய விளக்கு படிகம் நீலமணியைச் சார்ந்தபொழுது நீலமாயும், செம் மணியைச் சார்ந்தபொழுது செம்மையாயும் விளங்கு வதைக் காண்க. இதனை நினைந்தே வள்ளுவப் பெருந் தகையும், அடுத்தது காட்டும் பளிங்குபோல்' என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க, தாயுமான அடிகளும் பளிங் கணையசித்து' என்று குறிப்பிட்டுள்ளதையும் சிந்தித்து மகிழ்க. படிகத்தின் வண்ணம் இவ்வாறு சாந்ததன் வண்ண மாக மாறுவதாயினும் படிகத்தின் வண்ணம் என்று ஒரு நிறம் உண்டு என்பதனை மறந்து விடுதல் கூடாது. இன்னோர் எடுத்துக்காட்டு: கண் ஒளியைச் சார்ந்த பொழுது ஒளி வடிவாயும், இருளைச் சார்ந்தபொழுது இருள் வடிவமாயும் நிற்றலை அதுபவத்தால் அறியப்படுவ தாகும். இங்கும் கண்ணின் ஒளி இவ்வாறு மாறுவதானா லும், கண்ணிற்கென்று ஒர் ஒளி உண்டு என்பதனையும் மறந்து விடுதல் கூடாது. இவ்வாறே பசுவாகிய உயிருக்கு ஒர் அறிவு உண்டு என்பதை அறிக. இந்த அறிவு அறியப் படும் பெருளிள் தன்மையாய் மாறும் என்பதனை நன்கு உணர்ந்து தெளிக. கிலத்தியல்பால் நீர்திரிங் தற்றாகும்; மாந்தக்கு இனத்தியல்ப தாகும் அறிவு." . என்று வள்ளுவ வள்ளலும் குறிப்பிட்டுள்ளதைச் சிந்தித்து - மகிழ்க. எனவே, சார்ந்ததன் வண்ணமாதல்’ என்பது உயிரின் தன்னியல்புகளில் (Essential nature முதன்மை யானது என்பதைத் தெளிக. i இதனால் உயிர் எப்பொழுதும் தனித்து நின்று விளங் காது គ្នា, ஒரு பொருளின் துணைகொண்டே அஃது அறியப்படும் எனவும் அறிந்து தெளிக. இதனால் உயிர்கள் எப்பொழுதும் தனித்தறியப்படா. அவை பெத்த நிலையில் 12. குறள்-706. 13. தா.பா. ஆகார புவனம்-18, 14. குறள்-452 -