பக்கம்:சைவமும் தமிழும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் i 53 பாசத்தோடும், முத்தி நிலையில் பதியோடும் வைத்தே அறியப்படுவனவாகும். இனி, உயிர்களின் பொது இயல் பினை-தடத்த இலக்கணத்தை-அடுத்த கடிதத்தில் விளக்குவேன். அன்பன், கார்த்திகேயன். 登恋 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலம் பல விளைவதாகுக. இக்கடிதத்தில் உயிரின் விரிவளவு (பரிமாணம்)பற்றி விளக்குவேன். இதற்கு முன் பிறர் கூறும் கருத்துகளை ஆராய்வது இன்றி யமையாததாகின்றது. உயிர் உடம்பின் அளவு ஆகாமை: சமண சமயத்தினர் தாம் எடுத்த உடம்பின் அளவாய் செழுகம் போல (அட்டை எனும் நீர்ப் பூசிசிபோல) நீளுதல் சுருங்குதல் இ. இஇ? அம்ையும் தன்மையது என்கின்றனர். இஃது உண்மை யாயின்,பெரிய உடம்பையுடைய உயிர்கள் பேரறிவுடையன வாயும், சிறிய உடம்பையுடைய உயிர்கள் சிற்றறிவுடையன வாயும் இருத்தல் வேண்டும். அஃதன்றியும், ஒருவகைப் பிறப்பிலேயும் அவ்வாறு வேறுபடல் வேண்டும். எடுத்துக் காட்டாக, மக்களில் பேருடம்புடையோர்பேரறிவினராயும் சிறியவுடம்பையுடைய உயிர் க ள் சிற்றறிவினராயும் இருத்தல் வேண்டும். அநுபவத்தில் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை; மாறியும் இருப்பதாகத் தெரிகின்றது. போர் முதலிய காரணங்களால் உறுப்புக் குறைபட்டவர் கட்கு முன் இருந்த அறிவு குறைந்து காணப்படவேண்டும். அவ்வாறில்லாமையால் உயிர் உடம்பின் அளவே நிற்கும் தன்மைய து என்ற கொள்கை பொருத்தமின்றிப் போகின்றது, - - - உயிர் விளக்குப் போல்வது ஆகாமை : ஒரிடத்தில் ஏற்றி வைக்கப்பெற்ற விளக்கின் ஒளி பல இடத்திலும்