பக்கம்:சைவமும் தமிழும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XX” கோ. தைய முத்து அவர்கட்கும், எழில்கொழிக்கும் முறையின் அட்டை ஓவியம் வரைதல், அச்சுக் கட்டை தயாரித்து மூவண்ணத்தில் அட்டையில் அச்சிட்டு லாமினேஷன் (Lamination) போடுதல்வரை பொறுப்பேற்று உதலிய ஒவிய மன்னர் திரு பி. என். ஆனந்தன் அவர்கட்கும், சீரிய முறையில் கட்டமைத்துத் தந்த கந்தன் அடிமை திரு எஸ். பி. சண்முகம்பிள்ளை (உரிமையாளர், Canesh Printing and Binding) அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றியறி தலைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். - இந்த நூலுக்கு ஆங்கிலத்தில் ஒர் அரிய முன்னுரை (Foreword) அருளிய பேராசிரியர் டாக்டர் வ. ஆ. தேவ சேனாபதி அவர்களை அறியாத தமிழர்கள்-சித்தாந்தி களே--இரார். கண்ணியம் மிக்க சைவக் குடும்பத்தைச் சார்ந்த இப் பெரும்பேராசிரியர் தம் பள்ளிப் படிப்பைப் புரசை நகரிலுள்ள ஒரு கிறித்தவப் பள்ளியில் முடித்துக் கொண்டு சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பயின்று தத்து வத்துறையில் பி. ஏ. (ஆனர்ஸ்) பட்டம் (1935) பெற்றவர். (1935-38) இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணாக்கராகவும், (1940-45) இல் சென்னைப் பச்சை யப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும் பணியாற் றியவர்: மீண்டும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணாக்கராகச் சேர்ந்து (1946-48) சிவஞான சித்தியாாசுயக்கம்' என்ற நூலை ஆய்ந்து. டாக்டர் (Ph, D.) பட்டம் பெற்றவர் (1949). பிறகு பச்சையப்பன் கல்லூரியில். தத்துவத்துறையில் துணைப் பேராசிரியராகவும் (1949-55), பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகவும் (1955-64), அடுத்துப் பேராசிரியராக வும் (1964-76) பணியாற்றியவர். 1975 முதல் டாக்டர் . எஸ். இராதா கிருஷ்ணன் மேல்நிலைத் தத்துவ ஆய்வு மையத்தில் இயக்குநராகப் பணியாற்றி 1978 இல்ஒய்வு பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பல சித்தாந்த நூல்களின் ஆசிரியர். சித்தாந்தத்தைப் பழுதர