பக்கம்:சைவமும் தமிழும்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 54. சைவ சமய விளக்கு பரவுவதுபோல், உயிர் இதயத்தில் புல் நுனிமேல் நிற்கும் பனித்துளி அளவினதாய் நிற்க, அதன் அறிவு (ஆற்றல்) உடம்பெங்கும் வியாபிக்கும் என்று கூறுவர் பாஞ்சாத்திரி கள். இக்கொள்கையும் பொருந்தாது என்பதைக் காட்டு வேன். விளக்கு துரலமாய்க் காணப்படுவதும், அதன் ஒளி சூக்குமமாய்ப் பரவுதலும் வெளிப்படை. அதுபோல உயிரின் ஆற்றல் சூக்குமமாய்க் காணப்படாத நிலையில் உடம் பெங்கும் பரவி இருக்க, உயிர் இதயத் தானத்தில் புல்நுனி மேல் உள்ள பனித்துளிபோல் கட்புலனாதல் வேண்டும். கண்ணிற்கும் புலப்படாத நுண்மையுடையதெனின், வேறு எப்படியாகிலும் அஃது அகப்படுதல் வேண்டும். அதுவும் கூடாதெனின், 'உடம்பெங்கும் பரவும் என்ற ஆற்றலுக் கும் இதயத் தானத்தில் நிற்கும் என்ற உயிருக்கும் வேற்றுமை இல்லாமையால் அந்த வாதமும் தோற்றொழி கின்றது. மேலும், விளக்கொளி பரவியுள்ள இடங்களிலெல்லாம் பொருள்கள் விளங்கி நிற்றல்போல் ஐம்பொறிகளிலும் அறிவு எப்பொழுதும் தடைபடாது நிகழ்ந்து கொண்டே இருத்தல் வேண்டும். உயிரின் ஆற்றல் உடம்பெங்கும் பரவியிருப்பினும், அது கன் மத்திற்கீடாக ஒவ்வோர் இடத்தே விளங்கும் என்று கூறலாம். அப்படியானால் எப்பொழுதாயினும் முழுவதும் விளங்குதல் நிகழ்தல் வேண்டும். அஃது ஒருபோதேனும் இன்மையால், உயிரின் ஆற்றல் உடம்பெங்கும் பரவி நிற்கும் என்பதற்குச் சான்றில்லை. அதனால் அவ்வாதமும் ஏற்க முடியாத தாகின்றது. உயிர் அணு அளவு ஆகாமை : பாஞ்சராத்திரிகளே யன்றி வேறு சிலரும் உயிரை அணு அளவினதாகக் கூறுவர் உயிர் அணு அளவு என அளவுபட்டு நிற்பின் அது சடமாய் விடுமன்றிச் சித்தாகாது. மேலும் பெரியனவும் சிறியனவு மாய் எண்ணற்ற துளைகளையுடைய உடம்பில் உயிர்