பக்கம்:சைவமும் தமிழும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் - 警競器 யாதேனும் ஒரு துளையில் ஒடி விடாமல் நெடுங்காலம் அதன் கண்ணே கட்டுண்டிருத்தல் கூடுமோ? கன்மத்தால் அவ்வாறு கட்டுண்டு நிற்கும் எனக் கருதினால் சூக்கு ம மாகிய கன்மம் தூலமாகிய உடம்பில் அணுவைத் தடுத்து நிறுத்த முடியாது. தடுத்து நிறுத்த முடியுமெனின், விலங்குகள் கயிறு முதலியன இன்றியே தறிகளிலும், கள்வர்கள் விலங்கு முதலியன இன்றியே சிறைக் கோட்டத் திலும் கன் மத்தால் கட்டுண்டு கிடத்தல் வேண்டும். அவை கூடுவதில்லை என்பது தெளிவு. ஆகவே, சூக்குமமாகிய கன்மம் துரலப் பொருளைத் துரலப்பொருள் வாயிலாகப் பிணிக்குமேயன்றித் தானே பிணிக்க மாட்டாது என்பது புலனாகும். இங்கனம் புலனாகவே, உயிர் அணுவளவின தாயின், அஃது உடம்பில் நில்லாது வீழ்ந்து விடும் என்பது தெளிவாகின்றது. அணுவும் துாலப் பொருள் என்பதையும் சிந்தித்து அறிக. இன்னும் உயிர் ஒரு பரமாணு அளதவினது எனக் கருதினால், அதனினும் பன்மடங்கு பெரியாயுள்ள உடம் பினை அஃது எங்ங்ணம் செயற்படுத்தல் கூடும்? உயிரின் அளவு அணு அளவாக இருப்பினும், அதன் ஆற்றல் உடல் முழுவதும் சென்று பரவும் எனக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு கொண்டால், ஆற்றல் என்பது பொருளின் வேறன்மையால் உயிர், அணு என்ற வாதம் தோல்வி யுற்று வீழ்கின்றது. ஆகவே, உயிருக்கு அனுபரிமாணம் கூறுதல் பொருந்தாதாகி விடுகின்றது. - உயிர் பற்றிய சித்தாந்தக் கருத்து : இனி, உயிரின் விரிவுபற்றிய சித்தாந்தக் கருத்தினை விளக்குவேன். உயிர் எல்லையற்று நிற்கும் வியாபகப் பொருளே, ஆயினும் இறைவனது வியாபகத்தில் அடங்கி நிற்பதாகும். அதாவது, பிற இயல்புகளிற்போலப் பரிமாணத்திலும் இடைப்பட்ட நிலையையுடையது. எனவே, உயிர் பாசத்தை நோக்க வியாபகமாயும், பதியை நோக்க வியாப்