பக்கம்:சைவமும் தமிழும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 சைவ சமய விளக்கு பியமாயும் நிற்பது உயிர் அல்லது ஆன்மா. ஆன்மா’ என்ப தற்கே "வியாபகம்’ என்பதே பொருளாகும். ஆன்மா இங்ஙனம் எங்குமாய் நிற்கும் வியாபகப் பொருளாயினும், அவ்வியாபகத்தைத் தோன்றவொட்டாது மறைத்து நிற் கின்றது. பாசம். அதனால் உயிரும் அனுப்போலத் தோன்று கின்றது. வியாபகம் மகத்து’ என்றும் ஏகதேசம் 'அணு' என்றும் சொல்லப்படும். எனவே, இயற்கையில் மகத்தாய் உள்ள உயிரை அணுத்தன்மை அடையச் செய்தது பாசமே. அணுத் தன்மையைத் தருதல்பற்றியே பாசத்திற்கு ஆணவம் என்ற காரணப் பெயர் உளதாயிற்று என்பதையும் அறிக. இந்தப் பாசம் நீங்கினால் உயிர் அணுத்தன்மை நீங்கி மகத்தாகவே நிற்கும் என்பதையும் உளங்கொள்க. ஆன்மாவின் இயல்பைத் தோன்ற வொட்டாது பாசம் மறைத்து நிற்றல் நீரின் இயல்பைத் தோன்ற வொட்டாது பாசி மறைத்து நிற்றல் போல்வது என்று விளக்கி வைக்க லாம். எனவே, பாசியை விலக்கினால் விலக்கிய அளவிற்கு நீர் தோன்றுதல்போல் மாயையின் காரியமாகிய உடல், பொறி, கரணங்கள் எந்த அளவில் நின்று ஆணவத்தை விலக்குகின்றனவோ அந்த அளவில் உயிரினது வியாபகம் புலனாகும் என்பதை உணர்ந்து தெளிக. ஆணவ மலத்திற்கு மாற்றாய் உள்ளது உடம்பு. ஆண் வத்தை நீக்கும் மாற்றுப் பொருளாக இறைவன் மாயை யின் காரியமாகிய உடம்பை ஆன்மாவிற்குக் கூட்டி யருளுகின்றான். உடம்பு உள்ள இடத்தில் ஆன்மாவிற்கு அறிவு நிகழ்தலும், ஏனைய இடத்தில் அறிவு நிகழாமையும் இயற்கையாகின்றன. ஆகவேதான் ஆன்மா தான் ஒன்றை அறியவும் செய்யவும் விரும்பும் இடத்திற்கு, இறைவனால் தனக்குக் கொடுக்கப்பெற்ற உடம்பைச் செலுத்துகின்றது. இத்தகைய உடம்பின் இடப் பெயர்ச்சியையே உயிரின் இடப் பெயர்ச்சியாக நினைத்து மயங்குகின்றோம். நுணுகி நோக்கினால் உண்மையில் இடம்விட்டுப் பெயர்வது உடம் பேயன்றி உயிரன்று என்பது.தெளிவாகும். இவ்வுண்மை