பக்கம்:சைவமும் தமிழும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iசு இயல் - 鲁5? தத்துவ ஆராய்ச்சியில் ஆன்மாவின் இயல்பை துணித்துணரு மிடத்தில்தான் தெளிவாகும். ஏனைய இடங்களில் இது தெளிவாகாமையால், வழக்கத்திலேயன்றி நூல்களிலும் கூட, உயிரே போக்குவரவு புரிவதுபோலக் கூறப் பெற் றிருப்பதையும் காணலாம். துறக்கப் படாத உடலைத் துறந்துவெங் துதுவரோடு இறப்பன்; இறந்தால் இருவிசும் பேறுவன்; ஏறிவந்து பிறப்பன், பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன் கொலோ என்றென் . உள்ளங்கிடந்து மறுகிடுமே." என்ற அப்பர் பெருமானின் திருவாக்கிலும், இருவினை ஆடின்-போக்குவரவு புரிய' என்ற அருள்ஞானச் செல்வர் மெய்கண்டாரின் பெருவாக்கிலும், மலம்மாயை கன்மம் மாயே யந்திரோ தாயி மன்னிச் சலமாரும் பிறப்பி றப்பில் தங்கிஇத் தரைகீழ் மேலும் நிலையாத கொள்ளி வட்டம் கறங்கென கிமிடத் தின்கண் அலமாரும் இறைவன் ஆணை யால்உயிர் நடக்கு மன்றோ,' என்ற அருணந்தி தேவரின் திருவாக்கிலும் இதனைக் கான லாம். - 15. தேவாரம். 4. 113:? 16. சி.ஞா.போ. சூத்.2. 17. சித்தியார்.2.88,