பக்கம்:சைவமும் தமிழும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

制莎器 சைவ சமய விளக்கு மேற்கூறியவாறு பொதுமை நோக்கில் கூறினும், உண்மை நோக்கில் ஆன்மா வியாபகப் பொருள் என்பதே யாகும். அங்ங்ணமாயினும் உயிர் இறைவனது வியாபகத் துள் வியாப்பியமே யாகவின், அந்நிலையை அவனது திருவடிக்கீழ் நிற்றலாகவே அருளிச் செய்வதை அருளா சிரியன்மார் அனைவருமே மரபாகக் கொண்டுள்ளனர். அம்மான் அடிகிழற் கீழதன்றோ என்றன் ஆருயிரே." என்ற நாவுக்கரசரின் திருவாக்கும், இருகாற் குரம்பை இதுகான் உடையது, இது பிரிந்தால் தருவாய் எனக்குன் திருவடிக் கீழோர் தலைமறைய்ே' உன்ற அப்பெருமானின் அருள் வாக்கும், தெளித்தேன் சிவன் அடி சேர்ந்தேன் இனிமிகத் தெள்ளியனே" என்ற சேரமான் பெருமாள் நாயனாரின் பெருவாக்கும், மாவேறு சோதியும் வானவரும் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்று தாய் கோத்தும்பி’ என்ற வாதவூரடிகளின் மணிவாக்கும், 18. தேவாரம்-4.84:10 19. டிெ 4.113:2 20. பொன்வண்ணத் தந்தாதி-23 21, திருவா. திருக்கோத்தும்பி-1