பக்கம்:சைவமும் தமிழும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6{} சைவ சம்ய விளக்கு உயிரினது அறிவு இச்சை செயல்கள் தூலமுடையவை. ஆகவே, உயிரினும் துாலமாகிய ஆணவம் உயிரின் இச்சை செயல்களைப் பற்றுமேயன்றி இறைவனது இச்சை செயல்களைப் பற்றாது என்பதை நீ அறிதல் வேண்டும். ஆகவே, ஆணவ மலத்தால் பற்றப்பட்டு வலியிழந்து கிடக் கும் ஆன்மாவினது அறிவு இச்சை செயல்களை இறைவனது அறிவு இச்சை செயல்கள் பெத்த காலத்தில் மாயை கன்மங்களின் வழியாகவும் முத்திக் காலத்தின் நேரேயும் செயற்படுத்தி நிற்கும்என்பதை முன்னர் ஒருவாறு கூறியதை ஈண்டு நீ நினைவுகூர்வாயாக. இங்ங்ணம் இறைவனது சக்திகள் என்றும் துாயனவாயும் செயற்படுத்துவனவாயும் உள்ளன. ஆயினும், ஆன்மாவினது சக்திகள் அனாதியே மாசுபடிந்தனவாயும் இறைவனது சக்திகள் செயற்படுத்தும் அளவிற்குச் செயற்படுவனவாயும் உள்ளன என்பதை அறிந்து தெளிவாயாக. இதனால் இம்மூன்று சக்திகளை உடைமை மாத்திரையில் ஆன்மா இறைவனோடு ஒரு நிகராதல் இல்லை என்பதையும் அறிவாயாக. - ஆயினும், ஆன்மா அறிவுடைப் பொருளாதலின், இறைவனோடு சிறப்பு வகையில் தொடர்பு கொள்ளுவதற் குரிய இனப் பொருளாகும். ஆனது பற்றியே 'ஆன்மா” என்னும் பெயர் இரண்டற்கும் பொதுப் பெயராயிற்று என்பதையும் அறிந்து கொள்க. அப்பெயரைப் பொதுமை நீக்கிக் கூறினால், பரமான்மா, சீவான்மா என்றாகின்றது. எனினும் ஆன்மா' என்பது சீவான்மாவையே குறிப்பது எங்கனும் புெருவழுத்தது.ஆனது,ஆர் இறைவனுக்கு இனப்பொருள்சவதிஓல்! அன்வி ண்மல்லாத பிற பொருள்கள்-என்ப உrங்கொள்க. இன்னோர் உண்மையையும் ஈண்டு நீ கருதுதல் வேண்டும். ஆணவ மலம் உயிரினது அறிவு, இச்சை, செயல் களை செயற்படவொட்டாது தடுத்து நிற்குமேயன்றி அவற்றை விடவும் இயலாது. ஏனெனில், தோற்றமும் கேடும் அறிவில்லாத பொருளிடத்தில் நிகழுமேயன்றி அறிவுடைய பொருளிடத்து நிகழா என்பதை அறிக.