பக்கம்:சைவமும் தமிழும்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் 霍器篡 ஆகவே, அறிவு. இச்சை செயல்கள் இறைவனிடத்திலாயி னும் உயிர்களிடத்தாயினும் அழிவில்லனவாகும். ஆணவ மலம் உயிரினது அறிவு இச்சை செயல்களைத் தடுத்து நிற்கும் அளவே செய்வதாகும். சடப்பொருள்களுள் ஒன்று மற்றொன்றால் இயல்பு கெடுமாதலின் மாயை கன்மம் என்பனவற்றால் ஆணவமலம் உயிரின் ஞானம் இச்சை செயல்களைத் தடுத்து நின்ற நிலைமை கெடப் பெறும். இங்ஙனம் நிலைமை கெடவே தடுக்கப்பட்டு நின்ற அறிவு முதலியவை செயற்படத் தொடங்கும். இது விடத்தால் தொடக்குண்டு மூர்சித்துக் கிடந்தவன் மணி மந்திர மருந்துகளால் விடம் இறங்கப்பெற்று உணர்வுடன் எழுதல் போல்வதாகும். உயிரை இந்நிலைக்கு உட் படுத்துவதால் ஆணவமலம் மூர்ச்சை என்ற பெயராலும் வழங்கப்பெறுகின்றது. - . . இங்ங்னம் சூக்குமப் பொருள், தூலப் பொருள். அறி வில் பொருள் என்பவற்றை துணித்து அறிந்தால்தான் ஆன்ம சொரூபம் தெளிவாய் விளக்கம் அடையும். இறை வனைப்போல் சூக்குமப் பொருளாகாத உயிர் துால்மா யிருத்தலின், ஆணவ மலத்தால் பற்றப்படும்போது பல் வேறு நிலையினை அடையும். இந்நிலைமைகளை அடுத்து வரும் கடிதத்தில் தெளிவாக்குவேன். அன்பின், கார்த்திகேயன். 雾3 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுகு, "நலன். நலனே விளைக. உயிர் துாலசித்தாதலால் அஃது இயல்பாகவே பாசத் தால் கட்டுண்டு கிடத்தல் அதன் பொது இயல்பாகும். இந்நிலை ஒரு காலத்தில் நீங்குவதேயாகும். உயிர் ஆனவ மலத்தோடு மட்டும் இருப்பது பின்னர் மாயை கன்மங் சை. ச. வி.--11 -- . . . . . .