பக்கம்:சைவமும் தமிழும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧懿乞 சைவ சமய விளக்கு களோடு கூடியிருப்பது, பின்னர் மும்மலங்களும் நீங்கப் பெற்று இறைவனோடு கலப்பது என்ற மூன்று நிலைகளை யுடையது. நிலைகளை அவத்தை (அவஸ்தை) என்று கூறுவர் வட மொழியாளர்கள். இந்த மூன்று நிலைகளை யும் இக்கடிதத்தில் விளக்குவேன்." கேவலாவத்தை : உயிர் ஆணவமலத்தோடு மட்டும் இருக்கும் நிலை கேவலம் என்று வழங்கப் பெறும். கேவலம்' என்ற சொல் தனிமை என்று பொருள்படும். இந்த நிலையில் ஆன்மாவிற்கு அறிவு இச்சை செயல் இல்லை. உடம்பும் இல்லை உட்கருவி செயல்களாகிய மனம்முதலியனவும் இல்லை. அதனால் வினைகளை ஈட்டுவ தும் இல்லை; அவற்றின் பயனாகிய இன்பதுன்பங்களை நுகர்வதும் இல்லை. உடல்,பொறி, கரணம் முதலிய எதுவும் இல்லாமல் அறியாமையே வடிவமாய்க்கிடக்கும் இந் நிலையை இருள் நிலை என்று வழங்கலாம். உயிர் என்பது ஒன்று இல்லை என்று சொல்லாமல் உள்ளது' என்பது மட்டும் கூற நிற்பதால், இது 'தன் உண்மை’ என்றும் கூறப் பெறும். இச்கலாவத்தை : இருள் நிலையாகிய கேவலத்தில் மூழ்கிக் கிடக்கும் கொடுமையைக் கண்டு கண்ணுதலான் இரக்கங் கொண்டு தன் கருணை காட்டுகின்றான். உயிரினிடம் அறியாமையைத் தந்து நிற்பதாகிய ஆணவ. மலத்தைப் போக்குதற்பொருட்டு மாயை கன்மம் என்ற இரண்டு மலங்களையும் கூட்டுவிக்கின்றான். அவற்றால் ஆணவமலம் சிறிதே நீங்கப் பெற்ற உயிர் உடல், பொறி, கரணங்களைப் பெற்று, விண், மண், பாதலம் என்னும் . மூவுலகங்களிலும் "புல்லாய்ப் பூண்டாய்...கல்லாய் மனித ராய்...முனிவராய், தேவராய்...எல்லாப் பிறப்பும் பிறந் திளைத்து' உழலும் நிலை சகலம் எனப்படும். 25. திருமந்திரம்-செய். 21.42.2228-இல் அவத்தை பேதங்கள் விளக்கப்பெறுகின்றன. சிவப்பிரகாசம் 33.49இலும் இந்த அவத்தை நிலைகளைக் கண்டு தெளியலாம். 26. திருவா. சிவ அடி 25-31