பக்கம்:சைவமும் தமிழும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi வோதிச் சிவபெருமானை இடையறாது சிந்தித்துத் தம் மனத்தில் அவரை நிலையாக நிறுத்திக் கொண்டவர். இத்த னைக்கும் மேலாக உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே' என்ற தொல்காப்பிய இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்பவர். சுமார் பன்னிரண்டு. ஆண்டுகளாக இவருடன் நெருங்கிப் பழக வாய்ப் பினைப் பெற்றவன். இப்பெருமக னாரின் முன்னுரை (Foreword) இந்நூலுக்கு அணிசெய்வது அடியேனின் பெரும் பேறு. இவர்தம் ஆசியால் அடியேனுக்கு மேலும் மேலும் சித்தாந்தத் தெளிவும் சிவன் பால் ஈடுபாடும் வளரும் என்பது என் திடமான நம்பிக்கை. முன்னுரை அருளிய முக் கண்ணன் அடியாருக்கு என் அன்பு கலந்த வணக்கத்தையும் நன்றியையும் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். ஜஸ்டிஸ் பி. வேணுகோபால் சென்னை உயர்நீதி மன்றத்தை அணி செய்யும் சிறந்த நீதிபதிகளுள் ஒருவர். வழிவழியாக வைணவ நெறியினைத் தழுவி வரும் மரபினில் வந்தவர். சென்னைச் சட்டக் கல்லூரியில் - நல்லோஸ் உதவி ஊதியம் (Schoparship) பெற்றுச் சிறந்த மாணாக்கராகத் திகழ்ந்தவர். ஏழாண்டுகள் (1944-51) வழக்குரைஞர் பணியில் புகழுடன் இலங்கியவர்; ஏழாண்டுகள் (1959-66) நடுவண் அரசின் சட்டப் பரிந்துரையாளராகவும் (Legal Edwiser) இரண்டாண்டுகள் (1966-88) வருமானப் பொதுப்பணித் துறையின் சட்ட ஆலோசகராகவும், பத்தாண்டுகள் (1968-78) வருமான வரித்துறையின் முறை மன்ற உறுப்பினராக, (Judical member) சென்னை, பாட்னா கல்கத்தா ஆகிய இடங்களில் பணியாற்றி நற்பெயரோடு திகழ்ந்தவர். இந்த நற்பெயர், புகழ் காரணமாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிப் பதவியை வழங்கியது நடுவண் அரசு. இங்கு இரண்டாண்டுகள் (1979-81) பெரும் புகழுடன் . தொல். சொல்-கிளவியாக்கம்-1