பக்கம்:சைவமும் தமிழும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 64 சைவ சமய விளக்கு கேவலம் சகலம் சுத்தம் என்றுமூன் றவத்தை ஆன்மா மேவுவன் கேவலந்தன் உண்மைமெய் பொறிக ளெல்லாம் காவலன் கொடுத்த போது சகலனாம் மலங்கள் எல்லாம் ஒவின போது சுத்தம் உடையன் உற் பவங்து டைத்தே." என்று சிவஞான சித்தியார் விளக்குதலைக் காண்க. இக் கூறிய இம் மூன்று நிலைகளும் காரண அவத்தை' என்று வழங்கப்பெறும். இறைவன் உடம்பைக் கூட்டு வதற்கு முன் இருந்த கேவல நிலை அனாதிகேஆலம். அன்றாடம் வரும் கேவல நிலை நித்திய கேவலம்'இனி உயிர்கள் உடம்பை எடுத்து வாழும் நிலையில் சர்க்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் ஐந்து நிலை வேறு பாடுகளை உடையனவாக இருக்கும். இந் நிலைகள் காரியாவத்தை’ எனவழங்கப் பெறும். இந்த ஐந்து நிலைகளும் அருந்தமிழில் கனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்று வழங்கப்பெறுகின்றன. இந்த அவத்தைகளை அடைந்து நிற்பதே உயிரின் தடத்த இலக்கணம் எனப்படும் பொது இயல்பு ஆகும் என்பதை அறிந்து தெளிக. - மேற்குறிப்பிட்ட சாக்கிரம் முதலிய ஐந்தும் கீழா லவத்தை, மேலாலவத்தை மத்தியாலவத்தை என்ற மூன்று வகையாக நிகழும் என்பதையும் நீ அறிந்து கொள்ள வேண்டும். கீழாலவத்தையில் அறிவு குறைந்து கொண்டே வரும். இம் முறையில் உயிர் சிறப்பாக நிற்குமிடமும் ஐந்தாகும். அவையாவன: சாக்கிரத்திற்குப் புருவ நடு; சொப்பனத்திற்குக் கண்டம் (கழுத்து); சுழுத்திக்கு 27. சித்தியார்--37