பக்கம்:சைவமும் தமிழும்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுே இயல் # 65 இதயம்; துரியத்திற்கு நாபி (உந்தி), துரியாதீதத்திற்கு மூலாதாரம் இடங்களாகும். இங்ஙனம் முறையே இறங்கிய உயிர், பிறகு அம்முறையே மேலேறிவருவதே மேலாலவத்தையாகும். இந்நிலையில் இறுதியாகப் புருவ நடுவை அடைந்த உயிர், அவ்விடத்திலேயே ஐந்து நிலைகளை அடையும். இவையே மத்தியாவத்தையாகும். இவை முறையே சகல சாக்கிரம், சகல சொப்பனம், శF&&} சுழுத்தி, சகலதுரியம், சகல துரியாதீதம் என்று வழங்கப் பெறும். இந்நிலையில் உயிர் தன்னால் அறியப்படும் பொருளில் அழுந்தி நிற்கும். இவ்வழுத்தம் சாக்கிரம் சொப்பனம் முதலியவற்றில் ஒன்றைவிட மற்றொன்றில் முறையே மிகுந்து நிற்பதாகும். இறுதி நிலையாகிய சாக்கிரா தீதத்தில் உயிர்ப்பு அடங்குதலும் உண்டு. இந்நிலை களைத் தெளிவாக எடுத்துக் காட்டல் இயலாது; அவரவர்களே தங்கள் தங்கள் அன்றாட நிகழ்ச்சிகளில் வைத்து அறிந்து கொள்ளல் வேண்டும். இந்நிலைகள் பொருள்களை அறியுங்காலத்தில் அவற்றை இட்ைவிடாது அறிதலும் விட்டு விட்டு அறிதலுமாகும். சாக்கிர நிலையில் பொருள்களை அறியும்பொழுது நாம் இடைவிடாது தொடர்ச்சியாய் அறிந்து கொண்டே இருப்பதில்லை. இடையிலே விட்டு விட்டுத்தான் அறி கின்றோம். அது நுனித்து நோக்கும் போதுதான் தெளி வாகப் புலனாகும்.' ஆயினும் விடுதலும், பற்றுதலும் மிகவிரைவில் மாறி மாறி நிகழ்தலால், சாக்கிர நிலையில் விடுதல் நமக்குப் புலனாதல் இல்லை; தொடர்ச்சியாய் அறிந்து கொண்டிருப்பது போலவே தோன்றுகின்றது. அஃது உண்மையன்று என்பதைச் சில பெரிய நிகழ்ச்சிகள் நிகழும்போது தெரிந்து தெளியலாம். கீழாலவத்தையில் உயிர் அறியாமையில் அழுந்துவ தால் அவை ஐந்தும் கேவல சாக்கிரம், கேவல சொப்பனம், கேவல சுழுத்தி, கேவல துரியம், கேவல துரியாதீதம், என்று சொல்லப்பெறும். இவ்விரண்டையும் விடுத்துச்