பக்கம்:சைவமும் தமிழும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*密爵 சைவ சமய விளக்கு சிவத்தில் அழுந்தும் நிலையிலும் ஐந்து வகை உண்டு. அவை சுத்த சாக்கிரம், சுத்த சொப்பனம், சுத்த சுழுத்தி, கீத்த துரியம், சுத்த துரியாதீதம் என்று வழங்கப்பெறும். கேவலம்-மறப்பு: ச க ல ம்-நினைப்பு: சுத்தம்-இவ் விரண்டும் அற்றது. கேவலத்தை இரவு என்றும் சகலத் தைப் பகல் என்றும் கூறுவர். ஆகவே, சுத்தம்-இராப் பகல் அற்ற இடம் என்ற பெயரைப் பெறுகின்றது. இவற்றை முத்தி நிலை கூறுமிடத்தில் தெளிவாக விளக்குவேன்." ஆகவே, சாக்கிரம் முதலிய ஐந்தும், கேவலம், சகலத், சுத்தம் என்ற மூன்று நிலைபற்றி நிகழும் எனவும்; முத்தி றத்து ஐந்து அவத்தைகள் உயிர்கட்கு உள்ளன எனவும் நன்கு உணர்ந்து தெளிக. யோக நிலையிலும் ஐந்தவத் தைகள் உண்டு. அவற்றைப் பயன் இயலில் விளக்குவேன்.28 உயிர் மேற்கூறிய ஐந்து அவத்தைகளில் ஐந்து இடங் களில் நின்று செயற்படுவதை எடுத்துக்காட்டு ஒன்றரல் விளக்குவேன். உயிர் புருவ நடுவில் நின்று சகல சாத்திரம் முதலியவைகளை அநுபவித்தல் அரசன், அமைச்சர் படைத்தலைவர் முதலியவரோடு அத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்து அரசு புரிதல் போல்வது. பின் கீழாலவத்தை யில் இறங்கி இறுதியில் மூலாதாரத்தில் செல்வது, அரசன் அத்தாணி மண்டபத்தைவிட்டுப் பல இடங்களைக் கடந்து அந்தப்புரத்திற்குச் செல்வது போல்வது. இங்கனம் இவ்விரு வகை ஐந்தவத்தைகளையும் விடுத்துச் சிவத்தை நாடுதல் அரசன் தனது ஆட்சியை முற்றிலும் விடுத்து ஒய்வு கொள்ளுதல் போல்வது." உயிர்கள் அளவிறந்தன என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளேன்". இந்த உயிர்கள் மூவகை ஐந்தவத்தை ேே. இயல்-;ே கடிதம்-5; 29. இயல்-;ே கடிதம்-5; 80. இந்த இயல்-8; கடிதம்-21; சக் 31. சி. ஞா. போ. சூத். அதி-3: வார்த்.24 (a) சிற்றுரை 鬍子範f落。 - • z .