பக்கம்:சைவமும் தமிழும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 33 சைவ சமய விளக்கு சிவாச்சாரியார் எண்னரிதாய்' எனவும், பிறந்த நாள் மேலும் பிறக்கு நாள் போலும்-துறந்தார் துறப்பார் தொகை' எனவும் எடுத்தோதி விளக்கினார். இச்சான் றோர்களின் வாக்குகளினால் உயிர்கள் எண்ணில’ என்ற சித்தாந்தம் அறியப்படும் என்பதைத் தெளிக. மூவகை உயிர்கள் : இங்ஙனம் அளவிலவாகிய உயிர் கள் பலவும் மூன்று வகையின வாய் உள்ளன என்பது சித்தாந்தக் கொள்கை யாகும். இவ்வகை, அந்த உயிர் களின் பாசப்பிணிப்புபற்றி அமைந்தன என்பதை உளங் கொள்க. அஃதாவது, ஆணவம், கன்மம், மாயை எனப் பாசம் மூன்று என்பதைப் பல விடங்களிலும் கூறியதை நீ நன்கு அறிவாய். இவை மூன்றும் மலம்-அழுக்கு’ எனப் படும். இம் மும் மலங்களுள் ஒன்றையே உடைய உயிர்கள், இரண்டை மட்டும் உடைய உயிர்கள், மூன்றையும் உடைய உயிர்கள் என்னும் முறைமையால் உயிர்கள் அனைத்தும் மூவகைப்படுவனவாகும்." மும்மலங்களுள் மூ ல மா ய் உள்ளது ஆணவமலம் என்பதை நீ அறிவாய். இஃது எல்லா உயிர்களையுமே பற்றியுள்ளது. ஒரு மலம் உடைய உயிர்கள் என்பன ஆணவம் ஒன்றையே உடையனவாகும். ஒரு மலம் உடையவர் விஞ்ஞானகலர் என்று வழங்கப் பெறுவர். ஆணவத்தை அடுத்து நிற்பது கன்மம். அதனால் இருமலம் உடைய உயிர் கள் ஆணவம், கன்மம் என்னும் இரண்டையும் உடையன வாகும். இருமலம் உடையவர் பிரளயாகலர் என்று பேசப் பெறுவர். மூன்றாவது மலம் மாயை. மூன்று மலங்களை 44. - 45. திருவருட் பயன். 2-வது உயிரவை நிலை-1 46. வைணவத்திலும் ஆன்மாக்கள் மூவகைப்படும். அங்கு பத்தர்கள் (தளைப்பட்டிருப்பவர்கள்), முத்தர்கள், நித்திய சூரிகன் என்று இவர்கள் வகைப்படுத்தப்பெறுவர் (டாக்டர் ந. சுப்பு செட்டியார்: முத்தி நெறி-புக் 名? காண்க)