பக்கம்:சைவமும் தமிழும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

††ዕ சைவ சமய விளக்கு மெய்ஞ்ஞானம் தானே விளையும் விஞ் ஞானகலர்க் கஞ்ஞான அச்சகலர்க் கக்குருவாய்-மெய்ஞ்ஞானம் பின்னுணர்த்து மன்றிப் பிரளய கலருக்கு முன்னுணர்த்துக் தான்குருவாய் முன்." என்ற வெண்பாவில் இம் மூவகை உயிர்களையும் குறிப் பிட்டுள்ளார். இவர்களுள் சகலர்' என்பதற்குக் கலையோடு கூடியவர் என்பது பொருள். அகலர்' என்பதற்கு கலை இல்லாதவர்' என்பது பொருள் கலை' என்பது மாயையின் கூற்றைக் குறிக்கும். மாயை மயக்கும் தன்மை உடையது. ஆதலின் சகலர்' என்பது மயக்கத்தை உடையவர்' என்னும் பொருளிலும் ஆகலர்' என்பது மயக்கம் இல்லாதவர்' என்னும் பொருளிலுமே வழங்கப்படுகின்றன என்பதையும் அறிக. - மாயை இருவகைக் கூறுபாடுகளையுடையது. ஒன்று: முக்குண வடிவாய் நின்று மயக்கத்தைச் செய்வது; மற்றொன்று: அவ்வாறின்றி அறிவை மயக்குதல் மாத் திரமே செய்வது. இவற்றுள் முக்குண வடிவாய மாயை "அகலர்' என்பவர்கட்கு இல்லை. கன்மமும் அங்ங்னமே மயக்குவதும், மயக்காததும் என இருவகைப்படும். அவற்றுள் மயக்கும் கன்மம் விஞ்ஞானகலருக்கு இல்லை. ‘விஞ்ஞானகலர்' என்பதற்கு விஞ்ஞானத்தால் கலை நீங்கப் பெற்றவர் என்றும்,’பிரளயாகலர்' என்பதற்கு பிரளயத்தில் கலை நீங்கப் பெற்றவர் என்றும் பொருள் கூறப்படுகின்றது. சொற்பொருள் அப்படியென்றாலும், செயற்கையாலன்றி இயற்கையிலும் விஞ்ஞானகலர், பிரளயாகலர் என்னும் நிலையினராய் இருத்தல் உண்டு. இங்ங்ணும் வேறு வேறு வகையாகச் சொல்லப்பெறும் உயிர்கள் அனைத்திற்கும் எவ்வகையான பந்தத்தையும் விடுத்து வீடு பெறுதலே முடிந்த பயனாகும் என்பதை அறிந்து தெளிக. அன்பன், * கார்த்திகேயன். 孕飞泵 ஞா. போ.சூத்-8. அதி.2. டிெ. வெ. 47 53. காலம், நியதி, கலை என் ன் ந்துவங்களும் மாயையிலிருந்து தோன்றும், ற மூன்று தத்து ளு