பக்கம்:சைவமும் தமிழும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛4 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலம் பல விளைவதாகுக. இக்கடிதம் தொடங்கி பாசங்கள் பற்றி விளக்குவேன். பசுக்களைப் பிணித்துள்ளவை பாசங்கள் ஆகும். பாசம் என்பதற்குக் கட்டுவது என்பது பொருளாகும். பாசங்கள் மூன்று. அவை ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும். இதனை முன்பே சுட்டிக் காட்டியுள்ளேன். இவற்றுள் மாயை அனைவ ராலும் எளிதில் உணரப்படுவது. ஏனெனில், பல்வேறு பிறவிகளாகக் காணப்படும் உடம்புகளும், மற்றும் நிலம் நீர் முதலிய பெரும் பொருள்களும் அவற்றினால் ஆக்கப் படும் சிறு பொருள்களும் ஆகிய உலகத் தொகுதி முழுவதும் மாயையின் செயல்களேயாகும். கன்மமோ இவ்வளவு எளி தாகக் காட்சியில் உணர முடியாதது; ஆனால் சிறிது துணித்து நோக்கினால் உணரக்கூடியது. இதற்குமேல் உள்ள ஆணவம் என்பதை உணர்தல் மிகவும் அரிது. இது சைவசித்தாந்தத்தின் சிறப்பான பகுதியாகும். பிற சம யங்கள் இதனை ஒப்புக் கொள்வதே இல்லை. பருப் பொருள் (துரலப் பொருள்) எளிதில் உணரப்படும் என்பதை யும், துண் பொருள் (சூக்குமப் பொருள்) எளிதில் உணர வாராது என்பதையும் நீ நன்கு அறிவாய், எனவே, மாயை பருப் பொருள். ஆணவம் நுண்பொருள்: கன்மம் இரண் டிற்கும் இடைப்பட்ட பொருள் என்பது விளங்கும். இந்த மூன்றும் மும்மலங்கள் எனப் பெயர் பெறும். மலம் என்பது அழுக்கு. உயிர்களின் தூய்மையைக் கெடுத்து நிற்றலால் இப் பெயர் பெற்றது. - முதலில் ஆணவத்தை விளக்குவேன். இஃது இல்லாத பொருளன்று; உள்ள பொருளே. அறிவுடைய பொரு ளாகிய உயிரை அறியாமையுடையதாகச் செய்வதே இதன்