பக்கம்:சைவமும் தமிழும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii. பணியாற்றி ஒய்வு பெற்றவர். பின்னர் ஒராண்டுக் காலம் (1983-84) தனிப்பட்ட நீதிபதியாகப் (ad hoc Judge} பணியாற்றிவர். இவருடைய சீரிய பணியையும் நற்புகழையும் கண்ட அரசு இவரைப் பல சமயம் பல ஆணையங்களில் பணி யாற்றும் பொறுப்பை வழங்கியது; பல் கலைக் கழகத் துணை வேந்தர்களைத் தேரிந்தெடுக்கும் குழுக்கள் போன்ற குழுக்களில் தலைவராகப் பணியாற்றும் வாய்ப் பினையும் வழங்கியது. இவற்றைத் தவிர பல இலக்கிய, கலை மன்றங்களிலும், கருத்தரங்குகளிலும் பங்கு பெற்று வ்ருகின்றார். இப்பெரியார் சமயத்துறையில் ஈடு பாடு மிக்கவர். இத்தகைய உயர் பண்புகளையெல்லாம் ஒருங்கே பெற்றுச் சமரச மனப்பான்மையுடன் திகழும் வைணவர் ஒருவரின் அணிந்துரையைச் சைவ சமயம் பற்றிய இந்நூல் பெற்றது. இதன் தனிச் சிறப்பாகவும் என்னுடைய பெரும் பேறாகவும் அமைகின்றது. அணிந்: துரை அருளிய பெருமகனாருக்கு என் இதயம் கனிந்த நன்றி என்றும் உரியது. - பேராசிரியர் K. சச்சிதானந்த மூர்த்தியவர்கள் பழுதற ஒதிப் புலமை மிக்க பண்புடையாளர். சைவசித்தாந்தத்தில் ஆழங்கால் பட்டவர். அறுபது அகவையைத் தாண்டும் நிலையிலுள்ள (பிறப்பு : செப்டம்பர் 24, 1924) இப்பெரு மகனார் தத்துவத் துறையில் எம் ஏ. பட்டம் பெற்றவர். இந்தியத் தத்துவத்தை ஆய்ந்து பிஎச். டி பட்டம் பெற்றவர். பல்வேறு குழுக்களில் பணியாற்றியவர். பல உள்நாட்டு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் உரை யாற்றிப் பெரும் புகழ் பெற்றவர். மூன்றாண்டுக் காலம் (1976-79)திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக இருந்தபொழுது ஒன்றரையாண்டுக் காலம் இவர் சீரிய தலைமையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவர்தம் அடக்கமான பண்பும், புரையறக் கலந்து பழகும் சீரிய குணமும், புலமையையும்