பக்கம்:சைவமும் தமிழும்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贯74 சைவ சமய விளக்கு இயல்பாகும். அறிவே உயிரின் இயற்கை என்பதையும் அறி யாமை. அதற்கு ஆணவ மலத்தின் சேர்க்கையாலாகிய செயற்கையே என்பதையும் நீ அறிதல் வேண்டும். இந்த ஆணவ மலம், நெல்லிற்கு உமி போலவும் செம்பிற் களிம்பு போலவும் அநாதியே உயிர்கட்கு இயற்கைக் குற்றமாய் அமைந்துள்ளது. இதனைச் சிவஞான போதம், நெல்லிற் குமியும் கிறைசெம்பி னிற்களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே." என்று குறிப்பிடும். இதனை விளக்குவேன். செம்பிற்கு அதன் கண் உள்ள களிம்பு குற்றமேயாகும். அக்குற்றம் இடையிலே ஏற்பட்ட குற்றம் அன்று. செம்பு என்று உண்டோ, அன்றே அந்தக் களிம்பும் உண்டு. அந்தக் களிம்பு செம்போடு என்றும் இராது நீங்கிவிடும் என்பது, அதனைப் புளி முதலி யன இட்டுத் துலக்கும்பொழுது களிம்பு சிறிதளவு நீங்கு தலும், துலக்கப்பட்ட செம்பில் பின்பும் களிம்பு மேலிடு தலும், புடமிட்டுப் பதமறிந்து இரச குளிகையைச் சேர்க்கும் பொழுது களிம்பு முற்றிலும் நீங்குதலும் உளவாதலை அறிகின்றோம். ஆகவே, களிம்பாகிய குற்றம் செம்பிற்குச் செயற்கையேயன்றி இயற்கை அன்று என்பது திேரற்ற மாகின்றது. இங்ங்னமே அரிசி தோன்றும்பொழுது உமி யோடு கூடத் தோன்றுகின்றதேயன்றித் தனியாகத் தோன்றுவதில்ல்ை என்பதை நீ அறிவாய். அரிசிக்கு உமி குற்றமேயன்றி குணம் அன்று. அதனால் உமி அரிசியை விட்டு நீங்கும்பொழுது, அரிசி தூய்மைபெற்று விளங்கு கின்றது. ஆகவே, உமியாகிய குற்றம் அரிசிக்குச் செயற் கையேயன்றி இயற்கையன்று என்பது தெளிவாகின்ற தன்றோ? இங்ங்னமே, உயிர் என்று உண்டோ அன்றே அதற்கு ஆணவ மலம் இருப்பினும், அஃது அதற்குக் குற்ற மாய்ப் பின்பு விட்டு நீங்குதலின், அது செயற்கை எனப் படுமன்றி, இயற்கை எனப்படாது. இம் மலம் 'சகசமலம்' 2. சி ஞா. போ. சூத்-;ே அதி-8; வெண்பா.8