பக்கம்:சைவமும் தமிழும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக இயல் 懒75 என்றும், அநாதி செயற்கை என்றும் வழங்கப்பெறும். சகசம்’ என்பதற்குக் கூடப் பிறந்தது' என்பது பொருள். ஆணவ மலம் ஒன்றேயன்றிப் பல இல்லை. ஆயினும் எண்ணிறந்த சக்திகளையுடையது. அதனால் எண்ணில் லாத ஆன்மாக்களை மறைத்து நிற்றில் அதற்குக் கூடுவதா கின்றது. ஆணவ மலத்தின் இயல்பினை, ஏகமாய்த் தங்கால எல்லைகளின் நீளும் எண்ணரிய சத்தியதாய்." என்று சிவப்பிரகாசம் செப்பும்; சித் தியாரும், ஒன்றதாய் அநேக சக்தி யுடையதாய் உடனாய் ஆதி அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து கின்றுபோத் திருத்து வத்தை நிகழ்த்திசெம் பினிற்க ளிம்பேய்க் தென்றும் அஞ் ஞானம் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே. என்று தெளிவுறுத்தும். இதனை விளக்குவேன். பகலவன் ஒரு பொருளேயாயினும் எண்ணற்ற கதிர்களைக் கொண்டு எண்ணற்ற பொருள்களை விளக்குகின்றான்; இது விளக்கும் சக்தி. இதுபோலவே இருளும் ஒன்றாய் இருந்தே எண் னில்லாத சக்திகளைக் கொண்டு எண்ணில்லாத கண்களை மறைக்கின்றது என்றும் இது மறைக்கும் சக்தி என்றும் உணர்தல் வேண்டும். இங்ங்னமே, ஆணவ மலமும் எண் ணிறந்த மறைத்தற் சக்திகளையுடையதாய் எண்ணிறந்த ஆன்மாக்களை மறைக்கின்றது என்பதைத் தெளிக. 3. சிவப்பிரகாசம்-20 4. சித்தியார்-8.80