பக்கம்:சைவமும் தமிழும்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

镇了8 சைவ சமய விளக்கு இனி ஒன்றாய், சடமாய், அளவற்ற சக்திகளையுடைய ஆணவ மலம் கேவலம், சகலம், சுத்தம் என்ற மூன்று நிலை களிலும் எவ்வாறு செயற்படும் என்பதை விளக்குவேன். கேவல நிலையில் ஆணவ மலத்துடன் மாயை கன்மங்களின் செயற்பாடு இன்மையால் ஆணவ மலம் அங்குத் தனது மறைத்தல் செயலைத் தடையின்றி செய்யும். அதனால் ஆன்மா அந் நிலையில் தனது அறிவு, இச்சை, செயல் என்பவற்றில் ஒன்றும் ஒரு சிறிதும் நிகழப் பெறாது. முழு மூடமாய்ச் சடப் பொருள் போலவே தான் என்ற ஒரு பொருள் இருப்பதாகவே தோன்றாமல் ஆணவத்தில் அமிழ்ந்து கிடக்கும். அப்பொழுது ஆணவ மலத்தின் சக்தி அறியாமையைத் தரும்பொழுது ஆவாரகசக்தி' என்று பெயர்பெறும். ஆவாரகம்-மறைப்பது. இதுவே ஆன வத்தின் சொரூபம் அல்லது உண்மை இயல்பாகும்." சகல நிலையில் மாயை, கன்மங்கள் செயற்படும் என் பதை அறிவாய். இந் நிலையில் ஆணவத்தின் சக்தி சிறிது அடங்கப்பெறும். அதனால் அது பருப்பொருளைக் காணும் காட்சியை மறைப்பதில்லை. நுண் பொருள்களைக்காணும் காட் சியை மட்டிலும் மறைத்து நிற்கும். நுண் பொருள்களைக் காணும் ஆற்றல் இன்மையால் பருப் பொருள்களின் தன்மை யும் உள்ளவாறு விளங்காது. ஒன்று பிறிதொன்றாகவே தோன்றும். அதாவது, நிலை யாத பொருள் நிலைத்த பொருள் போலவும், இழிந்த பொருள் உயர்ந்த பொருள் போலவும், துன்பப் பொருள் இன்பப் பொருள் போலவும் மாறித்தோன்றும். இந்நிலை இருளில் இருக்கும் பொழுது ஒன் றையும் பார்க்க இயலாத ஒருவருக்கு விளக்கு வரும்பொழுது பருப் பொருள்கள் விளங்க, நுண் பொருள் விளங்காமலும், பொருள்களின் வண்ண மும் வடிவும் உள்ளவாறு விளங்கா மல் மாறித் தோன்றுதலும் ஆகிய நிலையைப்போல்வதாகும். இவ்வாறு பொருள்கள் மாறுபட்டுத் தோன்றுவதால் அங்கும் இருளினால் விளைவதன்றி விளக்கினால் விளைவதன்று 5. டிெ. 89