பக்கம்:சைவமும் தமிழும்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霍常盘 சைவ சமய விளக்கு இதனையும் ஒர் எடுத்துக்காட்டு மூலம் தெளிவிப்பேன். பகலவன் ஒளியின் முன் விளக்கொளி அடங்கிக் கிடக்கின் றதேயன்றி அழிந்தொழியவில்லை என்பதை நீ அறிவாய். அதுபோலவே, இருளும் பகலவன் முன் அடங்கிக் கிடக்கின் நதேயன்றி அழிந்தொழியவில்ைை என்பதையும் நீ அறிதல் வேண்டும். எப்படியெனின், அது கதிரவனின் ஒளி உள்ள பொழுதும் பிற பொருள்களின் நிழல் தோன்றுவதாலும் அவ் வொளி மறைந்த உடன் முன்போலவே இருள் வந்து சூழ்வ தாலும் அறியப்படும். எனவே, ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும் என்றும் உள்ள பொருள்களே; அவை ஒரு காலத்தில் உள்ளனவாய்ப் பின்னொரு காலத்து இல் லாது அழிந்தொழிவன அல்ல. ஆகவே, அவை பெத் தத்தில் உள்ள ஆன்மாக்களைப் பற்றுகின்றன என்பதும் முத்தியில் உள்ள ஆன்மாக்களைப் பற்றுவதில்லை என்பது மாகிய வேறுபாட்டில் மட்டுமே உள்ளன என்று தெளிவா யாக. இதனை, முத்திதனின் மூன்றும் முதலும் மொழியக்கேள் சுத்தஅது போகத்தைத் துய்த்தல்அணு-மெத்தவே இன்பம் கொடுத்தல்இறை இத்தைவிளை வித்தல்மலம் அன்புடனே கண்டுகொள்அப் பா." என்ற உண்மை விளக்கத்தாலும் அறியலாம். 'பெத்தத்தில் இறைவனது இன்பம் உயிரிடத்து விளையவொட்டாது தடுத்து நின்ற ஆணவ மலம் முத்தியில் அவ்வாறு செய்ய மாட்டாது வாளா இருக்கும்’ என்பது இதன் கருத்தாகும் என்பதை உளங் கொள்க. ஆகவே, சுத்த நிலையில் ஆணவ மலத்தின் சக்தி அந்தர்ப்பாவித சக்தியாய்விடும் என்று உணாவாயாக. ஆணவ மலம் ஏனைய மலங்கட்கு மூலமாதலின் மூல மலம்' என்றும், இயற்கைக் குற்றமாதலின் சகச மலம்’ 7, உண்மை விளக்கம்-5