பக்கம்:சைவமும் தமிழும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிசு இயல் #79 என்றும், அறியாமையே வடிவமாய் நிற்றலிதை "இருள் மலம்' என்றும் மற்றும் பல பெயர்களையும் பெற்று நிற்கும். ஒருவிதத்தில் ஆணவம் இருளை ஒத்திருப்பினும், இன்னொருவிதத்தில் ஆணவம் இருளைவிடக் கொடியது. இருள் தன்னிடத்திலுள்ள பொருளை மறைக்கும்; தன்னை மறைக்காது. ஆனால் ஆணவம் தன் செயலை மறைப்பது மட்டுமன்றித் தன்னையும் மறைத்துக் கொள்ளும். இருளில் மறைந்து கிடக்கும் பொருள்கள் நம் கண்ணுக்குப் புலனாகா விடினும், அவற்றை மறைத்துக் கொண்டிருக்கும் இரு ளாவது நமக்குப் புலனாகும். ஆணவம் நம் அறிவை மறைக் கின்றது. அதே சமயம் தன்னையும் மறைத்துத் தன் செய லையும் மறைக்கின்றது. இருள் வெளிப்பட்டுத் தன்னைக் காட்டிக்கொண்டே தனது தொழிலைப் புரிகின்றது. ஆனால் ஆணவம் வெளிப்படாமல் தன்னை மறைத்துக் கொண்டே தனது தொழிலைச் செய்கின்றது. - ஒருபொருளும் காட்டாது இருள்உருவம் காட்டும்; இருபொருளும் காட்டாது இது." என்றும், பலரைப் புணர்ந்தும்இருட் பாவைக்குண் டென்றும் கணவர்க்கும் தோன்றாத கற்பு." என்றும் இதன் கொடுமையை விளக்கு வர் உமாபதிசிவம். அறிதோ றதியாமை கண்டற்றால்." என்றார் வள்ளு வப் பெருந்தகை. ஒருவர் தமக்கு உள்ள அறியாமையை 8. திருவருட் பயன் இருள்மல நிலை-3 9. டிெ. டிெ-5 30. குறள்-1110