பக்கம்:சைவமும் தமிழும்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 30 சைவ சமய விளக்கு அறிவு வந்தபின் அறிவதன்றி அவ்வறியாமை உள்ள பொழுது அறிவதில்லை. அதனால் அறியாமையாகிய ஆணவ மலத்தை அது நீங்கியபின் அறிவதல்லது அஃது உள்ள பொழுது அறிய முடியாதன்றோ? அதனால்தான் ஆணவ மலம் ஒருவற்குப் புலனாகாத பொருளாய் உள்ளது. சைவசித்தாந்தம் தவிரப் பிற சமயங்களுள் ஒன்றேனும் ஆணவ மலத்தை உண்டெனக் கொள்ளாதிருத்தற்கும் இதுவே காரணமாகும். அறியாமை உடையவருக்கு அவ் வறியாமை அறிவாய்த் தோன்றுதலன்றி அறியாமையாய்த் தோன்றாது. ஆதலின் அவருக்கு அறிவு கொடுத்தலும் இயலாது. இதனை, காணாதாற் காட்டுவான் தான்கானான்; காண்ாதனன் கண்டானாம் தான்கண்ட வாறு.* என்று கூறுவார் வள்ளுவப் பெருந்தகை. "அறிவு போல் அடர்ந்தெழும் அறியாமையின் வலியால்’’ என்பர் மாதவச் சிவஞான யோகி கள். எனவே, அறியாமை நீங்குதல் அதற் குரிய காலம் வரின் அல்லது, அதற்கு முன்னே நீக்குதல் ஒருவராலும் இயலாது. ஆணவ மல சக்திகள் பலவும் பல் வேறு கால எல்லைகளையுடையன. அக்காலம் வரும்வரை அவை நீங்கா; அக்காலம் வந்த பின்னரே அது நீங்கும். இன்னோர் உண்மையையும் நீ உளங் கொள்ளல் வேண்டும். உயிர்கட்குள்ள அறியாமை அவற்றின் இயல் பன்று; அஃது ஆணவத்தின் காரியமாகும். இயற்கையாயின் அஃது என்றும் நீங்காது. அதனால், அவைகட்கு வீடு” என்பது இல்லையாய்ப் பந்தமே நிலைத்ததாகிவிடும். அதனால் அறியாமை உயிர்களின் இயற்கையன்று என்பதை அறிக. உலகிலும் அறியாமை படிப்படியாய் நீங்கி வரக் 11. குறன்-849 (புல்லறிவாண்மை)