பக்கம்:சைவமும் தமிழும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிசு இயல் 臀器蒙 காண்கின்றோமேயன்றி நீங்காது நின்றலைக் கான வில்லையாதலாலும் இதனைத் தெளியலாம். அறியாமை செயற்கையாயின் மாயை, கன்மம் என்ற மலங்கள் உயிர்கட்கு அறியாமையைத் தருவன எனக் கொள்ளலாமோ என்ற ஐயம் நின்பால் எழலாம். அந்த ஐயத்தையும் போக்குவேன். மாயையின் காரியங்கள் உடல், பொறி, கரணங்கள் ஆகும். இவை உயிர்களின் அறிவை விளங்கச் செய்வனவேயன்றி விளங்கவொட்டாது மறைப்பதில்லை. இதனை விழிப்பிலும் உறக்கத்திலும் நன்கு உணரலாம். விழிப்பில் உடல், பொறி, கரணங்கள் செயற்படுகின்றன. அப்பொழுது உயிர்களுக்கு அறியாமை நீங்கி அறிவு விளக்கம் பெறுகின்றது, உறக்கத்தில் அவை செயலற்றுக் கிடப்பதால் உயிர்கட்கு அறிவு நீங்கி அறியாமை மேலிடுகின்றது. இதனால், மாயை அறிவை விளங்குவதன்றி மயக்குவதன்று என்பது தெளிவாகும். "மான்ய இருளன்று; விளக்கு என்கின்றார் மெய்கண்டார். இந்த ஞானச் செல்வர், - - மாயா தனு விளக்காம் மற்றுள்ளம் காணாதேல் ஆயாதாம் ஒன்றை.2 என்று கூறுவதைக் காண்க. ஆணவமும் மாயையும் இருளும் ஒளியும் போலப் பகைப் பொருள்' என்பர் உமாபதி சிவம், இகலிவரும் இவை உணரின் இருவெளியாம் தன்மை எய்தும்வகை தன்செய்தி இலங்கும்.' என்று அவர் குறிப்பதைக் காண்க. * கன்மமும் (வினையும்) செயல் புரியத் தூண்டுவதன்றித் தடுப்பதன்று. அதனால், செம்பில் களிம்புபோல் இயற்கை 12. சி. ஞா. போ. சூத்-4. அதி-2, பா.27. 18. சிவப்பிரகாசம்-37