பக்கம்:சைவமும் தமிழும்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#82 ಜಿಕೆ ಆಟ Sist &ತ್ರ யாகவே உயிர்களிடத்துப் பொருத்தியுள்ள ஆணவத்தை நீக்குவதற்கே இறைவன் மாயை கன்மங்களை உயிர்கட்குக் கூட்டினான் என்பது தெளிவாகும். எனவே, உடல் பொறி கரணங்களும் உலகமும் உயிர்களின் நன்மை கருதியே இறைவனால் அருளப் பெற்றனவாதல் அறிந்து தெளிக. இங்ங்னieாகவும் சிலர் உடம்பும் உலகமும் தமக்குத் தீங்கு தருவனவாகக் கருதி அவற்றைப் பகைப் பொருளாகக் 'கொண்டு வெறுப்பர். இது தவறு; பெருந் தவறு. உடம்பு முதலியவை எந்த நலம் கருதித் தரப்பெற்றனவோ அந்த நலத்தையறியாது அவற்றையே பெரியனவாக மதித்து அவற்றில் அழுந்துதல் குற்றமேயன்றி அவை அருளப் பெற்றதில் குற்றம் ஒன்றும் இல்லை என்பதை உளங் கொள்க. இவற்றால் அறியாமை, மாயை கன்மங்களின் காரியமன்று; வேறொன்றின் காரியமே என்பது புலனாவ தால், வேறொன்று எனப்படும். அதுவே ஆணவ மலம் என்பதைந் தெளிக, -- இன்னும்ர்ேக்ளின் அறிவு இச்சை செயல் என்னும் ஆற்றல்களை அழித்தொழியாது மறைத்தே நிற்கும் என் பதையும் நீ அறிதல் வேண்டும். அதனால் அந்த ஆணவ இருளை நீக்கக்கூடிய மாயை கன்மங்கள் சேருமாயின், அவ் விருள் நீங்க, முன் மறைந்து நின்ற அறிவு இச்சை செயல்கள் வெளிப்படும். இதனை மூன்று எடுத்துக்காட்டுகளால் தெளிவிப்பேன். சுடும் தன்மையுடைய நெருப்பின் சக்தி தடை மந்திரத்தால் தடுக்கப்படும்போது சுடாது நிற்கும்; பின் விடை மந்திரம் செலுத்தப்பெறும்போது சுடுதல் தொழிலைச் செய்யும். விறகில் நெருப்பு மறைந்து கிடக் கின்றது. அதனைக் கடையும்பொழுது அந்நெருப்பு வெளிப்படுகின்றது. நீர் பாசியால் மறைக்கப்பெறுகின்றது. கல்லெறி முதலியவற்றால் அப்பாசி நீங்கி நீர் புலப்படு கின்றது. இங்ஙனமே அறிவை மறைக்கும் ஆணவ மலத் துடன் மாயை கன்மங்கள் சேரும்பொழுது மறைந்து நின்ற அறிவு முதலியவை வெளிப்படும் என்பதை அறிந்து தெளிக,