பக்கம்:சைவமும் தமிழும்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

៤ម៉ែ ខ្ទឹមៅ . # 83 எல்லா உயிர்களையும் ஒருங்கே மறைத்துக் கொண்ட ஆணவ மலம் நீங்குங் காலத்து எல்லா உயிர்களினின்றும் ஒருங்கே நீங்காமல் சில சில உயிர்களாகவே நீங்குகின்றன. இதற்குக் காரணம் என்ன? எல்லா உயிர்களும் அறிவித்தால் ஒருங்கே அறிவதில்லை; அவை சிறிது சிறிதாகவே அறிகின்றன. இஃது உயிர்களின் பொதுத் தன்மையாகும். ஆயினும் சிறிது சிறிதாய் அறிவதிலும் பல்வேறு வகைப்பட முன்பின்னாய் அறிந்து வருதல் உயிர்தோறும் அமைந்துள்ள சிறப்பியல்பாகும். ஆகவே, அனாதியே ஆணவ மலம் மறைந்து நிற்றல் எல்லா உயிர்களிடத்தும் பொதுவாக உளதாயினும் அம்மறப்பு உயிர்தோறும் வேறு வேறு வகையாகவே இருக்கும். இவ்வாறு மறைத்து நிற்கும் வகை துலம், சூக்குமம், அதிசூக்குமம் (பரம்) என்று மூன்றாய் அமையும். இவை உயிர்களைப் பிணிக்கும் வகையிலும் வேறுபடும். ஆணவ மலம் துலமாய் வலிதாய்ப் பற்றிய உயிரை, பின் கன்மம் மாயை என்னும் இரு மலங்களும் வந்து பற்றும். அதனால் இவை மும்மலம் உடைய உயிர்களாகும். ஆண வ மலம் சூக்கு மமாய் மெலிதாய்ப் பற்றிய உயிரை, பின் கன்மம் மாத்திரமே வந்து பற்றும். இவை இருமலம் உடைய உயிர்களாகும். இவ்வாறன்றி ஆணவமலம் அதிசூக்குமமாய் மிகவும் மெலிதாகப் பற்றிய உயிரை, பின்னர் எம்மலமும் வந்து சாராது; அதனால் அவை, ஆணவமலம் ஒன்றையே கொண்டு ஒருமலம் உடைய உயிர்களாகத் திகழும். ஒரு மலம் உடை உயிர்கள் விஞ்ஞான கலர் என்று வழங்கப் பெறும். "விஞ்ஞானகலர்' என்பதற்கு விஞ்ஞானத்தால்பேரறிவால் - கலை நீங்கப் பெற்றவர்’ என்பது பொருள். கலை என்றது மாயையை. எனவே, அஃது இல்லாத உயிர் கள் அகலர்-கலை இல்லாதவர்' என்று வழங்கப்பெறு கின்றனர். இருமலம் உடைய உயிர்கள் பிரளயாகலர் என்று வழங்கும் பிரளயத்தில் கலை நீங்கப் பெற்றவர் என்று இதன் பொருள் ஆகும். மும்மலம் உடைய உயிர்கள்