பக்கம்:சைவமும் தமிழும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxlii உழைப்பையும் மதித்துப் பாராட்டும் பெருந்தன்மையும் என்னைக் கவர்ந்தன. நெருங்கிப் பழகும் வாய்ப்பும் இருந்தது. இவற்றின் நினைவாக சத்சித் ஆனந்தத்தை" ஒளிவிட்டுக் காட்டும் சைவசமய விளக்கினைப் பண் புடையார் பட்டுண்டு உலகம் என்ற பொய்யாமொழிக்கு இலக்கியமாகத்திகழும் பேராசிரியர் சச்சிதானந்த மூர்த்திக்கு அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன். இவர் இதய கமலத்தில் கோயில் கொண்டிருக்கும் கண்ணுதலப்பனின் கருணையினால் என்னிடம் அவனைப்பற்றி அறியும் அவாவைத் துாண்டி அவனை அடையும் பேறும் பெறுவேன் என்பது என் திடமான நம்பிக்கை. அன்புப் படையலை ஏற்றருளிய பேராசிரியர் மூர்த்திக்கு என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது. - - இந்த நூலையான் எழுதி வெளியிட என்னுள்ளே தோன்றாத் துணையாக எழுந்தருளியிருக்கும் வேங்கடம். மேவிய விளக்கினை மனம் மொழி மெய்களால் வணங்கி வாழ்த்தி இறைஞ்சுகின்றேன். - உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படு உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்துநோக்கில் கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே." --திருநாவுக்கரசர் பெருமான் வேங்கடம்’ - | 慢 - 4 哆 சென்னை.600 04 0 ந. சுப்பு ரெட்டியார் 1 5-9- 384 s . - 5. குறள்-996 (பண்புடைமை) . 8. தேவாரம். 4.75; 4, அரியும் அரனும் என்னுள்ளத்தில் இரண்டு ஒளிவிளக்குகளாக வீற்றிருப்பவர்கள்.