பக்கம்:சைவமும் தமிழும்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ነ84 சைவ சமய விளக்கு சகலர்' என்ற பெயரால் வழங்கப் பெறும். சகலர்' என்ப தற்கு, கலையோடு கூடியவர் என்பது பொருள் இதனை முன்னரும் குறிப்பிட்டுள்ளேன்." விஞ்ஞானகலரும் பிரளயாகலருமாதல் இயற்கையாக முன்பே அமைதலும் உண்டு; செயற்கையாகப் பின்பு நிகழ்தலும் உண்டு. இக்கூறியவற்றால் உயிர்தோறும் மூலமலமாகிய ஆணவமலப் பிணிப்பின் வேறுபாட்டிற்கு ஏற்ப, மற்றைய மாயை கன்மங்களும் அமையும் என்பது தெளிவாகும். உயிர்கள்தோறும் ஆணவத்தின் பிணிப்பு ஒருவகையாய் இருத்தலின், உயிர்கள் அப்பிணிப்பினின்றும் நீங்கி விடு பெறுதலும் ஒருகாலத்தில் நிகழாமல் பல்வேறு காலங்களில் நிகழ்கின்றது என்பதை உணர்ந்து தெளிக. இவ்வாறு ஆண்வ மலத்தின் தன்மையைப் பல வகையிலும் ஆய்ந்து அறிந்து கொள்க. அன்பன் கார்த்திகேயன். 25 அன்பு நிறைந்த கண்ணுதலப் பனுக்கு நலன். நலனே யாகுக. இக்கடிதத்தில் கன்மத்தைப்பற்றிச் சிறிது விளக்குவேன். கன்மம் என்பதும் கருமம் என்பதும் ஒன்றே. நாம் வினை என்று சொல்லுகின்றோமே அதுவும் கன்மமே. நாம் செய்யும் செயல்கள் யாவும் கன்மங்களே யாகும். ஆனால் தத்துவஞான உலகில் கன்மம் என்ற சொல் சற்று விரிந்த கருத்து ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கமுண்டு; பலன் உண்டு. அப்பலனை அநுபவித்தலும் ஒரு செயலாகும். இவை அனைத்தையுமே கன்மம் என்ற சொல் குறிக்கும். செயல் மட்டுமின்றி எண்ணம் சொல் ஆகியவையும் கன்மத் 14. இயல்.: கடிதம்-23; பக்கம் (168-179)