பக்கம்:சைவமும் தமிழும்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் # 35 துள் அடங்கும். எல்லாச் செயல்கட்கும் பலன் உண்டு. அப்பலன்கள் யாவும் செய்தவனையே சென்று அடையும். சில செயல்களின் பலன்கள் உடனேயே சேரும். சில செயல் களின் பலன்கள் சில காலம் சென்று சேரும். இந்த உண்மை களைப் பொதுவாக எல்லோரும் ஒப்புக் கொள்வர். இந்தக் கன்மத்தைப்பற்றிச் சைவசித்தாந்தம் கூறுவதை இனி விளக்குவேன். பதி உண்மை, பசு உண்மை இவற்றைக் காட்டியதுபோல் வினை உண்மையையும் காட்டுவது இன்றியமையாததாகின்றது. கன்மம் என்பதும் வினை என்பதும் ஒன்றையே குறிக்கும். எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்புகின்றன. எனினும் அவை துன்பதையும் துகர நேரிடுகின்றது. சிலருக்குத் தாம் தொடங்கும் செயல் எதுவாயினும் அஃது இனிது முற்றுப் பெறுவதற்குரிய சூழ்நிலைகளே தொடர்ச்சியாக அமைந்து விடுகின்றன. எனினும், வேறு சிலருக்கு தொடங்கும் செயல்கள் அனைத்திலும் அவை தடைப்படுவதற்குரிய சூழ்நிலைகளே அமைகின்றன. அன்றியும், ஒருவருக்கே சிலகாலம் தொடர்ச்சியாக நல்ல சூழ்நிலைகளே அமைவதையும், பின்பு சிலகாலம் தீமை யான சூழ்நிலைகள் அமைவதையும் காண்கின்றோம். இவற்றால் இன்பதுன்பங்களுக்குச் சூழ்நிலைதான் காரண மாயினும் அச்சூழ்நிலைகளின் அமைப்பிற்குக் காரணம் வேறொன்று உள்ளது என்பது தெளிவாகின்றதன்றோ? அந்தக் காரணத்தைத் தான் வினை அல்லது கன்மம்’ என்று குறிப்பிடுவர் மெய்விளக்க அறிஞர்கள். சமுயற்சியுடையவர் செல்வத்தையும் முயற்சி இல்லாத வர் வறுமையையும் அடைவர்” என்பது ஒரு பொது விதி. வள்ளுவர் பெருவானும். - முயற்சி திருவினை யாக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.' 15-குறள் 6:6