பக்கம்:சைவமும் தமிழும்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச இயம் 畿常 வினவலாம். இந்த ஐயத்தைப் போக்குவேன். ஒருகாரியத் திற்குக் காரணம் ஒன்றே என்று கருதவேண்டா; பல காரணங்களும் இருக்கலாம். அவை அனைத்தும் உள்ள பொழுதே காரியம் நிகழும். எடுத்துக் காட்டு ஒன்று இதனைத் தெளிவிக்கும். ஒரு செடி உண்டாவதற்கு வித்து ஒன்று மட்டிலும் காரணம் அன்று; நிலம், நிர், கரிய மிலவாயு, கதிரவனது வெப்பம் முதலிய பலவும் காரணங் களாகும் என்பதை நீ உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடத்தில் தெரிந்திருப்பாய். இவை அனைத்தும் ஒன்று கூடும்பொமுதுதான் செடி உண்டாகும். ஒரு காரியத்திற்குப் பல காரணங்கள் இருப்பினும், அவற்றுள் ஒன்றே முதன்மை உடையதாயிருக்கும்; மற்றவை அக்காரியம் முற்றுப் பெறத் துணையாக அமையும். மேற் குறிப்பிட் - செடியின் தோற்றத்திற்கு வித்து முதற் காரணம்; முதன்மைவாய்ந்தது. மற்றவை யாவும் அவை முளைத்துப் பயன் தருதற்குத் துணையாய் அமைவனவே என்பதை நீ உணர்வாய். இங்கணமே உயிர்களின் இன்ப துன்பங்களுக்கு வினை முதற் காரணம்; முயற்சி துன்ைனக் காரணம் என்பதை அறிந்து தெளிக, முதற் காரணம் துணைக் காரணங்கட்கு வேறுபாடு என்ன? ஒன்று இன்றிப் பிற காரணங்கள் யாவும் உள்ள வழியும் காரியம் தோன் றாதும், அஃது உள்ள பொழுது காரியம் தோன்றுதலும் நிகழுமாயின், அந்த ஒன்று எதுவோ அதுவே முதற்காரணம்; ஏனைய பலவும் துணைக் காரணங்கள். நிலத்தைப் பண்பட உழுது நிர்பாய்ச்சி எருவிட்டாலும் நிலத்தில் விதை இல்லை யேல் பயிர் தோன்றாது; விதை இருப்பின் பயிர்தோன்றும். அதனால் விதை முதற் காரணம்; ஏனையவை துணைக் காரணங்கள். உழுதல் முதலிய முயற்சிகள் யாவும் விதை யாகிய முதற் காரணம் செடியைத் தோற்றுவித்தற்குத் துணையாவனவாகும். இதுபோலவே இன்பத்தை எய்தற் பொருட்டு எவ்வளவு முயற்சி செய்தாலும் இன்பத்தைத் தருகின்ற வினை இல்லாதபொழுது இன்பத்தை அடைய