பக்கம்:சைவமும் தமிழும்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3; சைவ சமய விளக்கு இல்லை' என்னும் கருத்து இவற்றில் எவ்வாற்றானும் பெற வைக்கவில்லை என்பதையும் உணர்க. 'இன்பதுன்பங்களுக்கு வினையே முதற் காரணம்: என்று கூறியதோடன்றி, வள்ளுவர் பெருமான், அவற்றிற் குத் துணைக் காரணங்களாகிய முயற்சி,அறிவு என்பவற்றை பும் வினையே தருவனவாகக் கூறியுள்ளதையும் ஈண்டு உனக்கு எடுத்துக் காட்டுவேன். - ஆகூழல்ை தோன்றும் அசைவின்மை, கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி," - (அசைவு-மடி.) பேதைப் படுக்கும் இழஆழ்: அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை: துண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்." என்ற குறட்பாக்களில் இக் கருத்து விளங்கக் கூறியுள்ள தைக் காண்க. - - - இயற்கையில் சுறுசுறுப்புடையவராக இருக்கும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் சுறுசுறுப்பின்றிச் சோம்பல் கொண்டு இருந்து, அச்சோம்பலின் விளைவாகப் பெரிய தோன் இழப்பினை அடைதல் உண்டு என்பதற்கு வாழ்க்கை யைக் கூர்த்து நோக்குவோர் நன்கு அறிவர். அவரைச் சோம்பல் கொள்ளச் செய்தது அவரது தீவினையேயாகும். இயற்கையில் நுண்ணறிவும் பெருங் கல்வியும், உலக அநுபவ மும் உடையவராகிய ஒருவர் குறிப்பிட்ட ஒரு செயலில் அறிவு மயங்கித் தவறான வழியில் சென்று கேடுறுவதற்கும் அவர் திவினைதான் காரணம் என்பதை உளங்கொள்க. இவர்கள் இருவருக்கும் எதிராக இயற்கையில் சோம்ப 20. குறள்-371 21. டிெ-7ே2 இ2. டிே-373