பக்கம்:சைவமும் தமிழும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#சு இயல் $ 3 } லுடைய வரும், மந்த மதியுடையவரும், கல்வியும் பட்டறிவும் இல்லாதவரும் பெருநலம் பெறுவதற்கும் அவரது நல்வினையே காரணமாகும். எனவே, உலகில் ஒவ்வொருவருக்கும் அவ்வப்பொழுது வரும் நன்மை தீமை கட்கு எல்லாம் அவரவர்கள் முயற்சி செய்வதும் செய்யா மையும் அல்ல என்பது தெளிவாகின்ற தன்றோ? இதனால் "வினை அல்லது கன்ம மலம் உண்டென்பது நன்கு புலணுகும் நாலடியாரில் பழவினை என்ற ஒர் அதிகாரமும், திருக் குறளில் ஊழ் என்ற ஒர் அதிகாரமும் இருப்பதை நீ அறிந் திருப்பாய். அந்த இரண்டையும் படித்தால் கன்ம மலம் பற்றி சில செய்திகளை அறிந்து கொள்வாய். ஊழ் என்ற சொல்லுக்கு இருவினைப் பயனும் செய்தவனையே சென் நடை தற்கேதுவான நியதி' எனப் பொருளுரைப்பர் பரிமே லழகர். மேலும், அவர் ஊழ், பால், முறை, உண்மை தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே பொருளுடைய சொற்கள் எனவும் தெரிவிப்பர். தொல்காப்பியர் ஊழை 'பாலறி தெய்வம் என்று குறிப்பிடுவர்.' நாலடியாரில் சமண முனிவர், பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாங் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப் பழவினையும் அன்னதகைத் தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு." (பழவினை-கன்மம், சிழவன்-உரிமையுடையோன்.) என்று வினையின் வலிமையை விளக்குவர். ஊழை நினைத் தால் சிலப்பதிகாரம் என்ற காவியம், நினைவிற்கு வராமல் போகாது. ஊழின் வலியை வற்புறுத்துவதற்கென்றே எழுந்த காப்பியம் அல்லவா? ஊழ்வினை உறுத்து வந்துாட்டு வதைக் கோவலன் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகின்றது. இப் பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத கோவலன், 23. ஊழ் என்னும் சொற்குப் பொருள் கூறும்போது, 24. தொல், பொருள். களவியல்-நூற்பா-2 25. நாலடி-101