பக்கம்:சைவமும் தமிழும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராண இலக்கியங்கள் - 213 சிந்திப்போம்; ஆதலினால் நமதுபழ வினைகளெல்லாம் சிந்திப் போமே. பாயிரத்தின் இறுதிப்பாடல் நூல் சருக்கங்களைத் தொகுத் துக் கூறுகின்றது. இளைதாக முள்மரம் கொல்க என்ற குறட்கருத்தை அடிப்படையாக வைத்து ஞாதியரையும் அவ்வாறு அழிக்க வேண்டும் என்று துவலும் பாடல் இங்குச் கருதத் தக்கது. ஞாதியரை முட்செடியை நஞ்சையழல் தன்னை ஏதம் ஒழிப்பதும் எய்துவதன் முன்னே, ஆதலின் அவர்க்குரிமை யானபொரு ளெல்லாம் நீதியிலார் கைக்கொள்ள நினைத்திவை உரைப்பார். இதனையடுத்து வேதியச் சிறுவன் ஒருவன் தனக்குத் திருக்கோயிலில் கிடைக்க வேண்டிய முதல் தாம்பூலம் வேண்டுமென்று இறைவனை வழித்துணை மருந்து என்று விளித்துக் கேட்கும் பாடல்கள் குறிப்பிடத்தக்கன. இறை வன் முடி வளைத்த கதை மிக உருக்கமாய் அமைந்துள்ளது. என்புநெக்கு நெக்குருக என்னிதயத்தி லிருப்பான் மன்பதைக்கெலாம் உயிருமாய் உணர்வுமாய் வளர்ப்பான் அன்பருக்கெலாம் நினைத்திடும் வார்த்தையும் அளிப்பான் வன்பருக் கெல்லாம் கொடியவன் திருமுடிவளைத்தான். இவருக்குச் சொற்களைச் அடுக்கிச் சொல்வதில் விருப்பம் அதிகம். - அஞ்சுமுகி நாலுமுகி ஆறுமுகி மாறா மஞ்சுமுகி நேரேனும் வராகமுகி வானாள் நெஞ்சுமுகி கார்முகி சிலீமுகிய ராகி விஞ்கமுகில் நானொலி விளைத்தமர் விளைத்தார். பிரியாவிடை பிரியாவிடை பிரியாவிடை யுடையாய் சரியானதி னுரியாகிய கலைமேவிடு தலைவா,