பக்கம்:சைவமும் தமிழும்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* இயல் $ 33 リ。 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விளைந்திடுக. கன்ம மலத்தைச் சித்தாந்தத்தின் அடிப்படையில் விளக்குவேன். ஆணவ மலம் இயற்கை (சகச) மலமாயும் மூல வமாயும் இருத்தலால், அதனை நீக்குதற் பொருட்டே கன்ம மிலமும் மாயை என்ற மலமும் உயிர்கட்கு உள. வாயின. இதனை முன்னொரு கடிதத்திலும் குறிப்பிட்டுள் ளேன்." இதனால் கன்மமும் மாயையும் ஆகந்துக மலம்’ என வழங்கப் பெறும். ஆகத்துகம்-பின்பு வருவது. எனவே, ஆணவ மலம் நீங்குங் காலத்து இவையும் ஒருங்கே நீங்குவனவாம் என்பதை உளங்கொள்க. ஆணவ மலம் அறிவிற்கு மறுதலையாய் உயிர்களை நேரே தடை செய்து நிற்றலால் அது பிரதிபந்தம் என்ற பெயரால் வழங்குகின்றது. கன்ம மிலம் ஆணவ பந்தத்தின் பயனை உயிர்கட்கு உறுவித்து நிற்றலால் அஃது 'அநுபந்தம் என்று பெயர் பெறுகின்றது. மாயா மவம் கன்மத்தால் தொடர்பு படுத்தப்பெற்று நிற்றலால் அது "சம்பந்தம் என்று கூறப்பெறுகின்றது. இவற்றையும் நீ அறிதல் வேண்டும். ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும் அநாதியே என்பதையும் நீ அறிதல் வேண்டும். ஆனவ பந்தம் உயிர்களை மேல் நோக்கி எழாது கீழ் நோக்கி அழுத்துதலினால் உயிர்கள் தமக்கு மேலான இறைவனை அறியாது, கீழான கன்மத்தையே நோக்கும். அதனால் அவற்றிற்குப் பொது வகையாய் நிற்கும் மூல கன்மம் (முதல் வினை உளதாகும். (இந்த மூலக ன்மம்பற்றி அடுத்த கடிதத்தில் விளக்குவேன்) கன்மம் மாயையையே பற்றிக் 28. இந்த இயல்; கடிதம்-24; சை, ச. வி.-13 -