பக்கம்:சைவமும் தமிழும்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 34. சைவ சமய விளக்கு கிடத்தலின் கன்மத்தின்வழி மாயை உயிர்களை வந்து பற்றும்; இம்மூன்றிற்கும் இடையீடு இன்மையால் மும்மலங் களும் ஆன்மாவிற்கு அநாதியே உள்ளனவாம் என்பதை அறிக. அதனால் கன்மம் முன்பு வந்ததோ? மாயை முன்பு வந்ததோ? என்னும் வினா ஒருவகையில் வேண்டாத தாகின்றது. ஏனெனில், உயிர்கள் இயற்கையில் தூய்மை யாக இருப்பின் அக்கேள்வி பொருந்தும், கன்மம் மாயை கட்கு ஏதுவான, ஆணவம் உயிர்கட்கு இயற்கையில் இருத்த லால் அஃது ஏதுவாக வரும் கன்மம் மாயைகளும் அன்றே உளவாம் என்பதை அறிந்து தெளிக, இதனை, நெல்லிற் குமியும் நிகழ்செம்பி னிற்களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே-வல்லி மலகன்மம் அன்றுளவாம்." (வல்லி-மாயை) என்று கூறுவர் மெய்கண்டதேவர். உமாபதி.சிவமோ, ......... வினையோ அன்றிச் சொல்லிவரும் மாயையோ அணுவை முந்தச் சூழ்ந்ததெனும் உ ைமுதல்ஒர் தொடக்கி லாபால் ஒல்லைவரும் எனின் உளதாம்; உயிர்உண் டாவே உளதுமலம், மலம் உளதா ஒழிந்த எலலாம் நெல்லின் முளை தவிடுமியோல் அகாதி யாக கிறுத்திடுவர்; இதுசைவம் நிகழ்த்து மன்றே.89 என்று மேலும் விளக்கமாக உரைப்பர். உமாபதி சிவத்தின் விளக்கத்தைத் தெளிவுறுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் ஆன்மாவுடன் 29. சி, ஞா. போ. சூத். 2. அதி. 2. பா. 12. இ), சிவப்பிரகாசம்-25, -