பக்கம்:சைவமும் தமிழும்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் 糖3莎 சேர்ந்திருப்பதை நெல்லிலே முளை, தவிடு, உமி சேர்ந் திருப்பதைக் காட்டி விளக்குவர், உமாபதிசிவம், மூளையைப் போன்றது கன்மம். தவிட்டைப் போன்றது மாயை உமியைப் போன்றது ஆணவம். எனவே, அரிசி ஆன்மாவிற்கு உவமையாகின்றது என்பது தெளிவு. இந்த மூன்று மலங்களும் எந்த விதத்தில் உமி, முளை. தவிடு ஆகிய மூன்றுடன் ஒற்றுமைப் படுகின்றன என்பதை விளக்கு தல் வேண்டும். இதனை விளக்குவேன். நெல்லிலுள்ள முளைத்தல் ஆற்றல் முளையைத் தோற்றுவிப்பதுபோலக் கன்ம மலம் உயிரினிடத்துச் சுகதுக்கங்ளை முதற் காரண மாய் நின்று தோற்றுவிக்கும்; தவிடு முளைத் தற்கு அநுகூலம் செய்து உடன் நிற்குமாறுபோல, மாயா மலம் அச் சுகதுக்கங்கள் தோன்றுவதற்குத் துணைக்காரணமாய்த் தன் காரியமாகிய தனு கரணம் முதலியவற்றையும் உயிரை யும் அசைவித்து நிற்கும். உமி அம்முளை தோன்றுவதற்கு நிமித்த காரணமாயிருப்பதுபோல ஆணவ மலம் அச்சுக துக்கத் தோற்றத்திற்கு நிமித்த காரணமாய் நின்று அவற்றை முறுகுவித்து உயிர் நுகருமாறு நிலை பெறுத் தும். இங்கு ஆன்மாவின்சுகதுக்கங்களுக்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் திமித்தம், முதல், துணை ஆகிய மூன்று காரணங்களாக அமைவது குறிப்பிடத் தக்கது. இங்ங்ண்மாயினும், ஆணவத்தைச் சக்சம், என்றும், ஏனைய இரண்டையும், ஆகந்துகம்’ என்றும் கூறுதல் ஏதுவும் விளைவும் ஆகிய முறைமையற்றியே யாகும் என்பதைச் சிந்தித்து ஒர்ந்து உணர்க. இனி, ஆணலத்தோடொப்ப அநாதியாகச் சொல்லப் படும் கன்மம் மூல கன்மம் என்பதாகும். அது நன்மை, தீமை என்று பாகுபாடு அடையாமல் பொதுவாய் நிற்கும். பின்னர் அது செயற்படும் காலத்தில் நல்வினையும் தீவினையும் என இரண்டு வகையாய்ச் சிறப்புற்றுச் செயல் பற்றிப் பலவாகித் திகழும். ஆணவ பந்தத்திற்கு ஏற்பவே மூல கன்ம பந்தமும், மாயா பந்தமும் உயிர்கட்கு உள்ளன