பக்கம்:சைவமும் தமிழும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய விளக்கு என்பதையும் நீ அறிதல் வேண்டும். இப்பந்தங்கட்கு ஏற்ப இறைவன் தனது சக்தியால் மாயையினின்றும் சூக்கும உடம்பைப் படைத்துத் தருவான். சூக்கும உடம்பை அடைந்த உயிர்கள் ஆணவ பந்தம் சிறிது நீங்கப் பெற்றுத் தம் மூல கன்மபந்தத்திற்கு ஏற்ப அறிவு, இச்சை செயல்கள் விளங்கப்பெறும். அங்கனம் விளங்கப் பெற்றவழி அவைகட்கு உண்டாகும் விருப்பு வெறுப்பு இவற்றிற்கு நல்வினையும் தீவினையுமாக முடியும். அவ் வினைக்கேற்பவே இறைவன் உயிர்கட்குத் துல உடம்பைப் 1్చ படைத்துத் தருகின்றான். "எழுவகைப் பிறப்பு’ என்று நூல்களில் குறிப்பிடப்பெறுவதெல்லாம் இந்தத் துரல உடம்பில் அமைவதேயன் றிச் சூக்கும் உடம்பில் அமைவ தன்று என்பதை நினைவிலிறுத்துக. உயிர்கள் சூக்கும உடம்பைக் கொண்டு நினைப்பவற்றைத் துால உடம்பு கொண்டு செய்து நல்வினை தீவினைகளை ஈட்டும்; அவற்றின் பயனாகிய இன்பதுன்பங்களை-சுகதுக்கங் களை-அந்துபவிக்கும். அவற்றால் உயிர்கள் மணிவாசகப் பெருமான், . புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பரவையாய்ப் பாக்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லகர ராகி முனிவராய் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்து' என்று கூறியவாறு பல்வகைப் பிறப்புகளில் மறிமாறிப் பிறந்தும் இறந்தும் உழலும். அறம், மறம்’ என்று தமிழிலும் புண்ணியம், பாவம்' என்று வடமொழி யிலும் சொல்லப்படுவன இச்சூக்கும வினைகளையே என்பதை நீ அறிதல் வேண்டும். நல் வினை இன் பத்தையும், தீவினை துன்பத்தையும் திரும் என்பதையும் 31. திருவா, சிவபு. அடி (25.31)