பக்கம்:சைவமும் தமிழும்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் $ 37 உணர்தல் வேண்டும். எனவே, கன்மமே-வினையே-பிற விக்கும் அதன் கண் உளவாகும் இன்பதுன்பத்திற்கும் காரணமாதல் வெளிப்படை என்பூதை உளங்கொள்க. மேற்குறிப்பிட்ட நல்வினை மனம், வாக்கு, காயம் என்று தீவின் மூன்றுவிதமாக நடைபெறும். அவற்றுள் மனத்தால் நினைக்கும் நினைப்பினால் தோன்றுவன ‘மானத கன்மம் என்ற பெயரால் வழங்கும். வாயினால் அவற்றைச் சொல்லும் சொற்களால் தோன்றுவன வாசிக கன்மம்' எனப்படும். உடலால் செய்யும் செயல் களால் தோன்றுவன காயிக கன்மம்' என்று சொல்லப்படும். எனவே, உயிர்கள் தம் மனம், மொழி, மெய்களால் நல் வினை, தீவினைகளைத் தேடிக் கொள்கின்றன என்பது தெளிவாதல் அறிக. இம்மூவகைக் கன்மங்களைப் பற்றி யும் வள்ளுவம் குறிப்பிடுகின்றது. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல்.’ என்பன போன்ற குறள்கள் மனத்தால் வினை உண்ட தலைக் குறிக்கின்றன. இன்னும் அன்பும் அருளும் பொறு மையும் காரணமாகத் தோன்றும் நல்ல நினைவுகளும் அழுக் காறு, அவா வெகுளி இவை காரணமாகத் தோன்றும் தீய நினைவுகளும் இவ்வகையில் அடங்கும். நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாராப் பண்பிற்சொல் பல்லா ரகத்து.' என்றாற்போலும் வரும் குறட்பாக்கள் வாயால் வினை உண்டா தலைக் குறிப்பிடுகின்றன. இப்பகுதியில் வாய்மை, பாராட்டு, இன்சொல் உறுதிச்சொல் என்னும் நற்சொற் களும், பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என்னும் தீய சொற்களும் அடங்கும். 81. குறள்-232 82. டிெ-194