பக்கம்:சைவமும் தமிழும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 சைவ சமய விளக்கு பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் " என்றாற்போல் வரும் குறட்பாக்கள் உடம்பில் வினை உண்டாதலைத் தெரிவிக்கும். நன்றி, ஈகை, இன்னா செய்யாமை, புலால் உண்ணாமை முதலிய நற்செயல்களும் களவு, கொலை, கள்ளுண்டல், புலால் உண்டல் முதலிய தீச் செயல்களும் காயத்தால் செய்யப்பெறும் வினைகளுள் அடங்கும். இன்னும் ஒர் உண்மையையும் ஈண்டு நீ அறிதல் வேண்டும். மனம் மொழி மெய்களால் நினைவு, சொல் செயல் என்பன துரலமாய் நிகழ்ந்த நிலையினின்றும் நீங்கிச் சூக்குமமாய் நிலைபெற்று நிற்கும்; பின் காலம் வரும்போது தம் பயனை உயிர்கட்குத் தரும் துாலமாய் நிகழ்வதே இரு வினைகட்குத் தோற்றமாகும்; பின் அவை சூக்குமமாய் நிற்றல் நிலைபேறு ஆகும்; பின் காலம் வந்த பொழுது தம் பயனைக் கொடுத்து நீங்குதலே அவற்றின் அழிவு ஆகும். இவற்றையும் நீ அறிதல் வேண்டும். "அழிதல்" என்பது, துரங் நிலையை விட்டுச் சூக்கும நிலையை அடைதலாகும்’ என்றும், எந்தப் பொருளும் எக்காலத்திலும் அடியோடு இல்லா தொழிதல் இல்லை’ என்றும் இத்தொடர் கடிதங்களில் பல முறையும் கூறி வந்ததை ஈண்டு நினைவு கூர்தல் மேலும் விளக்கத்தைத் தரும். இன்னும் ஒரு தத்துவக் கருத்தையும் ஈண்டு உனக்கு விளக்குதல் பொருத்தமாகும்; அஃது இன்றியமையாததும் கூட நல்வனவும் தீயனவுமாகச் செய்யப்படும் வினைகள் ”ஆகாமியம் என்ற பெயரால் வழங்கும். பின் அவை சூக்கும மாய் மறைந்து நிலைபெற்று நிற்கும்பொழுது சஞ்சிதம்: என்ற பெயரைப் பெறும். இச்சூக்கும வினைகள் பின்னர் இன்பதுன்பங்களாய் வந்து பயன்தரும்பொழுது பிராரத்தம்’ 33. વિઠ્ઠ--339