பக்கம்:சைவமும் தமிழும்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 go சைவ சமய விளக்கு னின்றும் நீங்கி முன்போலச் சூக்குமமாய் விளங்காது காரண நிலையை அடைவதே அழிவு என்பதை முன்னரே விளக்கியுள்ளேன். இதையும் நினைவுகூர் க. சற்காசிய முறை துரலப் பொருளில் தெளிவாகத் தெரி வதுபோல் சூக்குமப் பொருளில் தெளிவாகத் தெரிவ தில்லை என்பதை நீ சிந்தித்து அறிதல் வேண்டும். எடுத்துக்காட்டாக மண் காரணம்; பானை காரியம் அதனால் பானை தான் தோன்றுவதற்கு முன்பும் மண்ணில் சூக்குமமாய் உள்ளது என்று கொள்கின்றோம். வினை அல்லது கன்மம் என்னும் காரீயத்திற்கு, பானைக்கு மண் போல ஒரு காரணப் பொருளைச் சொல்லவில்லையே என்ற போக்கில் நின் சிந்தனை செயற்படக்கூடும். இதனையும் விளக்க வேண்டியது இன்றியமையாத தாகின்றது. "பானை' என்னும் காரியம் துரலப் பொருளாதலின் அதற்குக் காரணம் மண் என்பது எளிதில் உணரவும், உணர்த்தவும் படுகின்றது. வினை சூக்குமப் பொருளாதலின், அதன் காரணம் இன்னது என எளிதில் உணர முடிவதில்லை. "இல்லது தோன்றாது; உள்ளதே தோன்றும் என்பது உண்மையாதலின், வினை ஒருவனால் செய்யப்படுவதற்கு முன்னும் உள்ளதேயன்றி இல்லாதது அன்று. முன்பு இயற்கையாய் உள்ள வினையைத் தான் பின்பு ஒருவன் செயற்கையாகச் செய்கின்றான். இயற்கையாய் உள்ள வினை காரண கன்மமும், பின்பு அதனை ஒருவன் செயற் கையாகச் செய்யும் வினை காரிய கன்மமும் ஆகும். காரண கன்மம்தான் மூல கன்மம் என்று அடைமொழி தந்து விளக்குவர் சைவ சித்தாந்திகள். - மண்ணும் பானையும் என்ற எடுத்துக்காட்டில் காரணப் பொருளாகிய மண்ணும் காரியப்பொருளாகிய பானையும் வேறு வேறு பெயர்பெற்று நிற்பதால் அவை இரண்டும் காரணமும் காரியமும் ஆதல் பொருந்தும். கன்மத்தில் அவ்வாறு வேறு படுத்திக் காட்டும் சொற்கள் இன்மையால் குழப்பம் நேரிடுகின்றது. இதனையும் விளக்குவேன். துரலப்