பக்கம்:சைவமும் தமிழும்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் 翌畿督 பொருளாகிய காட்சிப் பொருள் உள்ளவாறே சூக்குமப் பொருளாகிய கருத்துப் பொருளும் இருத்தல் வேண்டும். வினை சூக்குமப் பொருள் அதன் காரண காரிய நிலை களில் பெரிய வேற்துமை இல்லை; அதனால் காரண நிலை யைக் குறிக்க மூல கன்மம்' என்று அடைமொழி கொடுத்துக் கூறி அமைகின்றனர் என்பதை அறிந்து தெளிக. இக்கருத்தை இரண்டு முறைகளால் விளக்குவேன். முதலில் கருதல் அளவையால் தெளிவிப்பேன். காட்சி யளவை மட்டிலும் பிரமாணம் அன்று என்றும், கருதலள் வையும் பிரமாணம்தான் என்றும் நீ நன்கு அறிவாய். தோன்றி நின்று அழிவன யாவும் காரியமே என்பதும் உனக்குத் தெரியும். வினையை ஒருவன் செய்யுங் காலத்து அது தோன்றுகின்றது; பின் காலம் வருந்துணையும் காத் திருக்கின்றது; காலம் வந்தவுடன் தன் பயனைத் தன்னைச் செய்தவனுக்கு தந்துவிட்டு ஒழிகின்றது’-இந்த உண்மை எல்லோருக்கும் உடன்பாடே. எனவே, தோற்றம், நிலை பேறு, இறுதி என்ற முன்றையும் உடைமையால் இங்குக் குறிப்பிட்ட இவ்வினை காரியமே என்பது தெளிவு; காரி யங்கள் யாவும் தமக்குக் காரணங்களை உடையன என்பதும் தெளிவே. இதனால் இக்காரிய கன்மமும் தனக்குக் கார னத்தை உடையது என்பதும், அக்காரண கன்மமே மூல கன்மம் என்பதும் கருதலளவையால் இனிது உணர்ந்து கொள்ளலாம். அநுபவத்தாலும் இதனை விளக்குவேன். வினை என்பது, பொருள்களின் புடை பெயர்ச்சி; அதாவது ஓர் இடம் விட்டு பிறிதோர் இடத்தை அடைதல். இதை இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் பொருள் களின் அசைவு எனலாம். இந்த அசைவு அந்தந்தப் பொருளிலும் அதனதனாலே இயற்றப்படுகின்றது என்பது உண்மையாகும். ஆயினும், அசைவுத் தன்மையை எந்தப் 35. Displacement.