பக்கம்:சைவமும் தமிழும்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 சைவ சமய விளக்கு பொருளும் தானே தன்னிடத்தில் அமைத்துக் கொள்ள வில்லை; அஃது இயற்கையாய் அதனிடத்தில் முன்பே அமைந்துள்ளது. இத்தன்மை, காலம், இடம் முதலிய சூழ் நிலைகளுக்கு ஏற்ப அதனினின்றும் வெளிப்படுகின்றது என்பது தெளிவாகும். அவற்றுள் அசைவுத் தன்மை அல்லது புடை பெயருந்தன்ம்ை போன்றது காரண கன்மமாகிய மூல கன்மம். அசைவு அல்லது புடை பெயர்ச்சி போன்றது காரிய கன்மம். "இதனை மேலும் தெளிவாக்குவேன். 'குயவன் பானையை வனைந்தான்’ என்று சொல்லும்போது பானையை வனைந்தவன் குயவன்தான் என்பதில் ஐயம் இல்லை. ஆயினும், வனைதல்’ என்ற தொழிலை அவன் அன்று உண்டாக்கவில்லை; அது, முன்பே உள்ளது. அங்ஙனம், ஒரு தொழில் முன்பதாக இல்லை என்றால், இப்பொழுது அதனை அவன் செய்ய இயலாது. வனைதல்’ என்ற தொழில் என்றும் இருப்பதால், அதனைக் குயவன் தான் விரும்பும்போது, விருப்பமான இடத்தில். விருப்பமான வகையில் செய்கின்றான். இப்படியேதான் உலகிலுள்ள மற்ற எல்லாத் தொழில்களின் நிகழ்ச்சிகளும் இக்காலப் புதிய அறிவியல் நுட்பத்தால் நடைபெறும் தொழில் நிகழ்ச்சிகளும் நிகழ்கின்றன என்பதனை உளங் கொள்க. இன்னும் பண்டைய இலக்கணமாகிய தொல்காப்பி யத்திலுள் ஒரு நூற்பாவைக் கொண்டும் விளக்குவேன். வினையே செய்வது செயப்படு பொருளே கிலனே காலம் கருவி என்றா இன்னதற் கிதுபய னாக வென்னும் அன்ன மரபின் இரண்டொடுக் தொகைஇ ஆயெட் டென்ப தொழில்முதல் நிலையே." இதில் தொல்காப்பியர் ஒரு தொழில் நிகழ்ச்சிக்கு முதல்நிலையாக எட்டுப் பொருள்கள் வேண்டப்படும்’ என்ற 86. தொல். சொல். வேற்றுமையங்கியல்-29,