பக்கம்:சைவமும் தமிழும்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக இயல் 芝鲁3 கருத்தைத் தெரிவிக்கின்றார். இங் கு முதனிலைகாரணம். தொழில் முதனிலை-தொழிலுக்குக் காரணம். "தொழிலுக்கு உள்ள காரணங்கல்ன் தொழிலும் வினையும் ஒன்று’ என்று அவர் கூறியிருப்பதுதான் நம் சிந்தனைக் குரியது. தொழிலுக்குக் காரணம் என்று சொல்வதிலிருந்து "தொழில் காரியம்’ என்பது வெளிப்படையாகத் தெரிகின்ற தன்றோ? காரணங்களைக் குறிப்பிடும் இடத்திலும் வினை என்ற ஒன்றைக் கூறுவார் எனவே, அவர் காரண வினை (காரகவினை) காரியவினை என வினைய இரண் டாகக் கொள்கின்றார் என்பது மிகத் தெளிவு. "வினையும் தொழிலும் வேறு என்பது இச்சூத்திரந்தான் உணர்தற்கு வினை என்று எடுத்துத் தொழில் முதல் நிலையே’ என முடித்தார்’ என்ற கருத்து நினைவில் கொள்ளத்தக்கது. மேற்கூறிய காரண கன்மத்தைத்தான் இங்கு நாம் மூல கன்மம்' என்கின்றோம். இதனை மாதவச் சிவஞான யோகிகள் தமது மாபாடியத்திலும் விளக்கியிருத்தலைக் கானலாம். மேற்கூறிய எடுத்துக்காட்டைக் கொண்டு இதனை மேலும் தெளிவாக்குவேன். வனைந்தான், கொடுத் தான்’ என்பவற்றிற்கு வனைதல்', 'கொடுத்தல்’ என்பன முதனிலைகள். இங்ஙனமே பிறவற்றிற்கும் முதனிலைகள் உள்ளன. எனவே, பல்வேறு வகைப்பட்ட தொழில் கட்கும் முதனிலையாய்ப் பொதுப்பட நிற்கும் முதனிலை ஒன்று உண்டு; அதனையே நாம் மூல கன்மம் என்று சிறப் பாகக் குறிப்பிடுகின்றோம். அது சிறப்பாக இன்ன செயல்’ என்று சொல்ல ஒண்ணாதபடி நிற்கும். இதனையே மேலே "புடை பெயரும் தன்மை-அசையும் தன்மை’ என்று குறிப்பிட்டேன். இத்தன்மை காலம், இடம், கருவி முதலிய வற்றோடு கூடிச் சிறப்பு வகையில் நிகழும்பொழுதே, வனைந்தான், கொடுத்தான், உண்டான்’ என்றாற்போல "இஃது இன்ன செயல்’ என்று சிறப்பு வகையில் குறிப் பிட்டுச் சொல்லும்படியாக அமையும். எனவே, காரண