பக்கம்:சைவமும் தமிழும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝翰盛 சைவ சமய விளக்கு கன்மமாகிய மூலகன்மம் பாகுபாடின்றி ஒன்றேயாய் நிற்கும் என்பதைக் கருத்தில் இருத்துக. காரிய கன்மம் "நல்லது தீயது என்று இருபெரும் பிரிவினதாய் விரிந்து ஒவ்வொன்றும் பற்பல வகையாய் விரிய, எண்ணிறந்தன வாகும். இவற்றுள் உயிர்கட்கு இன்பமாயும் துன்பமாயும் வந்து எப்பொழுதும் பந்திப்பது காரிய கன்மமே யாகும். ஆதலின், அதுவே எங்கும் பெரும்பான்மையாக எடுத்துச் சொல்லப்படும். எனினும் மேலே குறிப்பிட்ட தொல் காப்பிய நூற்பா போலவே, சில இடங்களில் மூலகன்ம உண்மையும் குறிப்பிட்டுக் காட்டப்படும். இருவினைப் பாசம் மும்மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில்வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத தரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ." என்ற திருப்பாடலில் சேக்கிழார் அடிகள் "ஆன்மாக்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று கற்களை நல்வினை தீவினை என்னும் இரண்டு கயிறுகளால் கட்டி பிறவியாகிய ஏழு கடல்களில் தள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகின்றார். இங்கு மூல கன்மத்தைக் கல்லாகவும், அதன் காரிய மாகிய புண்ணிய பாவங்களைக் கயிறு களாகவும் பிரித்து உருவகம் செய்திருத்தலைக் கூர்ந்து நோக்கி அறிக. மணிவாசகப் பெரு மானும், ...மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி..?? என்று கூறுதல் காரிய கன்மத்தையே என்பது தெளிவாகும். இக்கூறியவற்றால் நீ அறிய வேண்டியவை: (1) மூல கன்மம் ஒன்றேயாய் இருக்கும் (2) காரிய கன்மம் இருவகையாய் விரியும் என்பவையாகும். 87. பெரியபுரா. திருதாவு-129 38. திருவா. சிவபுரா. அடி (51-52)