பக்கம்:சைவமும் தமிழும்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் 2 மூலகன்மம் என்றும் இருத்தலால் வினை அனாதி” என்று சொல்லப்படுகின்றது. உயிர்களின் செய்கையால் அது தோன்றி நுகர்ச்சியால் அழிவதால் வினை ஆதி அந்தம் உடையது' என்றும் கூறப்பெறுகின்றது. அனாதி” என்பது காரண நிலையை நோக்கி, 'ஆதி அந்தம் உடையது என்பது காரிய நிலையை நோக்கி. ஆதலின் அவை இரண்டும் தம்முள் முரனுவன அல்ல என்பதைத் தெளிக’ இன்னும், செய்யப்படுவது வினை என்பது காசியகன்மத் தையே என்றும், காரண கன்மமாகிய மூலகன்மம் என்றும் இருப்பதால், சற் காசியவாத அடிப்படையில் காரிய கன்மம் அதனினின்றும் தோன்றும் என்றும் அறிந்து தெளிவு பெறுவாயாக. அன்டன், கார்த்திகேயன். 2リ அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன், நலம் பல விளைவதாகுக. முன்னொரு கடிதத்தில் ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என்று வினைகளின் மூவகை நிலைகளைக் குறிப்பிட்டேன் அல்லவா? அவற்றை ஈண்டு நினைவு கூர்க அவற்றை நினைவுகூரவே, இக் கடிதத்தில் விளக்கப் போகும் வினை பயன் தரும் முறை ஒருவாறு தெளி வாகும். . ஆகாமிய வினை பிராரத்தமாய்ப் பக்குவப்படும்வரை சஞ்சிதமாய்க் கிடக்கும். இவற்றுள் பக்குவப்பட்டவை பிராரத்தமாய் வரும். வினை தன் பயனைத் தான் தருவதற் குரிய எல்லாச் சூழ்நிலைகளும் வாய்க்கப்பெறுவதே "பக்குவப்படுதல்’ என்பதாகும். வினை அச் சூழ்நிலைகளைப்