பக்கம்:சைவமும் தமிழும்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱鲁密 சைவ சமய விளக்கு பெற்றுத் தரும் பயன் சாதி, ஆயு, போகம் என மூன்றாக நடைபெறும். சாதி என்பது பிறக்கும் இனம். சாதியினை வருணாசிரம முறையில் கொண்டாலும் கொள்க. இக் :த்தில் கூறப்பெறும் முற்போக்கு அடைந்த இனம், தாழ்த்தப்பட்ட இனம் முதலாகச் சொல்லப்பெறுவன வற்றைக் கொண்டாலும் கொள்க. இன்றைய நிலையில் உலகளாவிய பார்வையைச் செலுத்தினால் எந்த நாட்டி லும், எந்த வகையிலேனும் எவையேனும், சில பிரிவுகள் இருந்தே வருதலைக் காணமுடிகின்றது. இந்நிலைக்குரிய அரசியல், சமூக இயல் காரணங்களை இவண் ஆய்வதில் பயன் இல்லை. ஆனால் யார் என்ன முயற்சி செய்தாலும் "வினையின் பயனாக அவை இருந்தே தீரும் என்பதை மட்டிலும் ஈண்டு நீ உளங்கொண்டால் போதுமானது. இங்கனமே அரசியல் போர்வையில்-நாடகத்தில்?-யார் எங்கே எந்த வகையான முயற்சிகள் செய்யினும் வினையின் பயனான சாதிப்பிரிவு ஏதேனும் ஒரு வடிவத்தில் மக்களி டையே இருந்துதான் தீரும் என்பதை மட்டும் ஈண்டு நான் உணர்த்த விரும்புவது. -

இன்னும் இங்குச் சாதி” என்பதை படைப்பு விசேட - ځ٦حمي .ی * - -- கொண்டாலும் கொள்ளலாம். படைப்பு ஒருவகை ஆாதக் காணப்படாது மணிவாசகப் பெருமான் கூறியது பே; ல் "புல்லாய் பூடாய்ப் புழுவரய்......தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து' என்று பல்வேறு வகையாகக் காணப்படுவதையே இறப் பாகக் குறிக்கின்றது. இந்த வகையில் ஒவ்வோர் இனத்தி லும் பல பிரிவுகள் காணப்படுகின்றன. இவையெல்லாம் வினையினால் ஆவனவே என்பதை ஈண்டு நீ உளங்கொள்க. 18. திருவா. சிவபுரா. அடி (26-31,