பக்கம்:சைவமும் தமிழும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் 2 (3? ஆயு என்பது ஆயுள்ே வாழ்நாளைக் குறிப்பது. நீண்ட வாழ்நாள். குறுகிய வாழ்நாள் என்பனவும் வினை வின் பயனேயாகும். போகம் என்பது ஒவ்வோர் உயிரும் அநுபவிக்கும் இன்ப துன்பங்களாகும். வினை செயற் படுங்கால் இவையெல்லாம் நடைபெறும் என்பதை அறிக. வாழ்க்கையில் எத்தனையோ இன்ப துன்ப நிகழ்ச்சிகளைச் சந்திக்க நேரிடலாம். அவற்றையெல்லாம். சவாலாக ஏற்றுக் கொள்ளவேண்டும். "இடுக்கண் வருங்கால் நகுக' என்ற வள்ளுவர் அறிவுரையும் ஒருவகையில் இதுபற்றி எழுந்ததே என்பதையும் உளங்கொள்க. இன்னொரு குறிப்பையும், ஈண்டு நீ அறிதல் வேண்டும். பிராரத்த கன்மம் பயன் தருங்கால் தான் நேரே நின்று தாராது; எவையேனும் சிலவற்றை வாயி வாதக் கொண்டே தரும். அவ் வாயில்கள் பற்றிப் பிரா ரத்தம். ஆதியான்மிகம். ஆதிபெளதிகம்', 'ஆதிதைவிகம், என மூன்றாகப் பேசப்படும் சித்தாந்த வித்தகர்களால், இவற்றுள் தன்னாலேனும் பிற உயிர்களாலேனும் வருவன ஆதியான்மிகம். (எ-டு) சைகிள், ஸ்கூட்டரிலிருந்து வீழ்தல், குளியலறையில் வழுக்கி வீழ்தல் போன்றவை தன்னால் வருவன; தேள் பாம்பு கடித்தல், மாடு முட்டுதல், நாய் கடித்தல் போன்றவை பிற உயிர்களால் வருவன வாகும். அடுத்து, நிலநடுக்கம், பெருமழை, பெருவெள்ளம், பெருவறட்சி, இடி வீழ்தல், தீ மிகுதல், சூறாவளி அடித்தல் முதலிய பூதச் செயல்களால் வருவன ஆதிபெளதிகம்." பேய், பூதம், தீய தெய்வங்கள் இயமன் முதலிய தேவர் பகுதியால் வருவன ஆதிதைவிகம்." இவற்றையும் மனத் தில் இருத்துக. . - வினையைப் பற்றி மேலும் சில கருத்துகளை அறிந்து கொள்ளல் இன்றியமையாதது. சஞ்சிதமாய்க் கிடக்கும் வினைகள் பிராரத்தமாய் வரும்பொழுது முன்செய்த 40. குறள்-621 41. இதுப்பிரகாசம்-29