பக்கம்:சைவமும் தமிழும்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

説豊8 சைவ சமய விளக்கு முறையில்தான் வரும் என்பதில்லை; முன் செய்தது பின் லும், பின் செய்தது முன்னுமாக மாறி வருதலும் உண்டு. அதற்குக் காரணம் அவற்றின் வன்மை மென்மைகளே யாகும், மிகப் பெரிய புண்ணியமும், மிகப் பெரிய பாவமும் بسی செய்த பிறவிலேயே பிராரத்தமாய் வந்து பயன்தரும். குற்றொ ருவரைக் கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம் செற்றொ ருவரைச் செய்த தீமைகள் இம்மை யேவரும் மெய்ம்மையே." என்ற சுந்தரர் திருமொழி இங்கு நினைக்கத்தக்கது. இக் கருத்தினேயே திருவள்ளுவரும், பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.* என்ற குறளில் குறிப்பிட்டுள்ளமையை அறிக. பாபத்திற்கு இவ்வாறு கூறவே புண்ணிய மும் அவ்வாறே செயற்படும் என்பதைக் கூற வேண்டுவதில்லை. மற்றும், வினைகள் தாம் செய்யப்பட்ட முறையிலன்றி முன்பின்னாக, பின்முன்னாக வருவது அவ்வவ் வினையின் தன்மைக்கேற்ப நிகழ்வதேயாகும். தொடங்கடைவின் அடையாதே தோன்து மாறி.* என்பது சிவப்பிரகாசம். எடுத்துக்காட்டொன்று இதனைத் தெளிவாக்கும். உழவன் ஒருவன் முன்னர் பனை விதையை இடுகின்றான்; பின்னர் வாழையை நடுகின்றான்; அதன் பின்னர் கரும்பை நடுகின்றான்; அதன் பின்னர் கீரையை விதைக்கின்றான். இங்கு அவன் விதைத்த முறைப்படியே 43. குறள்-3 19 44. சிவப்பி, காசம்-29